அதிரடித் தாக்குதலில் 5 தீவிரவாத ஊடுறுவல் முகாம்கள் கூண்டோடு காலி.. ராணுவம்
டெல்லி: இநி்திய விமானப்படை நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் பாகிஸ்தான் பகுதிக்குள் செயல்பட்டு வந்த 5 தீவிரவாத ஊடுறுவல் முகாம்கள் கூண்டோடு அழிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி முடித்து விட்டு பின்னர் இந்தியாவுக்குள் ஊடுறுவதற்காக காத்திருக்கும் தற்காலிக முகாம்கள்தான் இந்த தீவிரவாத ஊடுறுவல் முகாம்கள். பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியுடன் இங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவுவார்கள் தீவிரவாதிகள். இந்த முகாம்களைத்தான் தாக்கி அழித்துள்ளது இந்தியா.

மொத்தம் 5 முகாம்களை கூண்டோடு அழித்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மொத்தமாக எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால் எண்ணிக்கை நிச்சயம் மிகப் பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 20 தீவிரவாத ஊடுறுவல் முயற்சிகள் தடுக்கப்பட்டதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து ஏராளமான ஜிபிஎஸ் கருவிகளையும் பாகிஸ்தான் அடையாளம் கொண்ட பல சாதனங்களையும் ராணுவம் கைப்பற்றியுள்ளது. தீவிரவாதிகள் பெரிய அளவில் இந்தியாவுக்குள் ஊடுறுவ காத்திருப்பதாக வந்த உறுதியான தகவலைத் தொடர்ந்தே இந்தியா அதிரடித் தாக்குதலில் இறங்கியதாம்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications