பேய்மழை.. திணறும் உத்தரகாண்ட்.. பனிச்சிகரத்தில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு.. ஒருவர் மாயம்
உத்தரகாண்ட்டில் பனிச்சிகரத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்
காட்மண்டு: வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் உத்தரகாண்ட்டில் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.. இதில், சுந்தர்துங்கா பனிச்சிகரத்தில் சுற்றுலா பயணிகளில் 5 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவரை காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
உத்தரகாண்ட்டில் இந்த வார துவக்கத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது.. கிழக்கு மலை பிரதேசங்களில் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்துபோனது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேற்றைய தினம் 77 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

மீட்பு பணிகள்
மேலும் படுகாயம் அடைந்த 22-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்... ஆனால், இன்னும் 26 பேரை காணவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், மாயமான அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

மின்சாரம்
நிலச்சரிவு காரணமாக, கிராமங்களுக்கு இடையிலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.. மின்சாரம் உட்பட பல்வேறு தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.. ஆயிரக்கணக்கான வீடுகளும், பாலங்களும், சாலைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயுள்ள நிலையில், பலத்த மழையால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்களும் நீரில் மூழ்கி உள்ளது, விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.

குமான் பிராந்தியம்
இதில், குமான் பிராந்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது... தொடர்ந்து பெய்த மழையால் 7,000 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் சிங்தாமி கூறியிருந்தார்.. மேலும், சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை விரைவில் சரி செய்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்த நிலையில், இந்த பகுதியில் வெள்ள சேதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் பார்வையிட்டார்.. அவருடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கவர்னர் குர்மித் சிங் ஆகியோரும் சென்றனர்.
Recommended Video

எச்சரிக்கை
பிறகு செய்தியாளர்களிடம் அமித்ஷா பேசும்போது, "மத்திய மற்றும் மாநில அரசின் நிறுவனங்கள் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்து பணிகளை மேற்கொண்டதால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். ஆனால், மாநிலத்திற்கு உடனடி நிவாரணம் எதையும் அவர் அறிவிக்கவில்லை... அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், கிழக்கு பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் காத்மாண்டு வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே, அறிவித்திருந்தது..

சுற்றுலா பயணிகள்
இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் 5 பேர் உயிரிழந்ததாகவும், ஒருத்தரை காணவில்லை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்துள்ளனர்.. அந்தவகையில், பெகாஸ்வரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனிச்சிகரங்களில் சுற்றுலா பயணிகள் 65 பேர் சிக்கிக்கொண்டனர். பெகாஸ்வரில் இருந்து மீட்புக்குழுவினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...

தவிப்பு
இதற்கிடையே சுந்தர்துங்கா பனிச்சிகரத்தில் சுற்றுலா பயணிகளில் 5 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவரை காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்... திவாலி சிகரத்தில் 4 நாட்களாக தவித்த 22 சுற்றுலா பயணிகளும் மீட்கப்பட்டனர்.. மீதமுள்ள 10 பேரை மீட்கும் பணி இன்று நடைபெறுகிறது. பிதோராகர் மாவட்டம் தர்மா மற்றும் பியாஸ் பள்ளத்தாக்கில் சிக்கித்தவித்த 60க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்கும் பணி நடைபெறுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications