தத்தளிக்கிறது அசாம்... கவுகாத்தியில் கனமழைக்கு ஒரே நாளில் 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழைக்கு நேற்று ஒரே நாளில் தலைநகர் கவுகாத்தியில் மட்டும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால், கம்ரப், லகிம்பூர், தரங், சோனித்பூர் மற்றும் உதல்குரி ஆகிய 5 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கவுகாத்தியில் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் தெருக்களில் வெள்ளம் ஓடுகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். மழை வெள்ளத்தால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு கவுகாத்தியில் சுவர் இடிந்து விழுந்து 3 பேரும், மின்சாரம் பாய்ந்து 4 பேரும் உயிரிழந்தனர்.

வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிழக்கு கவுகாத்தியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஏற்கனவே மீட்பு நடவடிக்கைகளை தொடங்கி விட்டனர். இதற்கிடையே, வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியாக இலவச தொலைபேசி எண்ணை அரசு அறிவித்துள்ளது.

பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி செல்வதால், படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+