விடுதியில் இருந்த விமான பணிப்பெண்.. பட்டபகலில் பலாத்காரம் செய்ய முயற்சி.. பரபரப்பு
கொச்சி : கேரளாவின் எர்ணாகுளம் அருகே விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த நாகலாந்தைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் விடுதியில் அறைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பாலாரி வட்டத்தில் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணான இளம்பெண் ஒருவர் விடுதியில் அறை எடுத்து வசித்து வருகிறார். அந்த குறிப்பிட்ட விடுதியில் கோட்டயம் மாவட்டம் கீழ்குன்னு பகுதியை சேர்ந்த 24 வயதாகும் டினு தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் வெளிவந்த தகவலின் படி, சம்பவத்தன்னு மதியம் விடுதியில் விமான பணிப்பெண் தங்கியிருந்த அறைக்கு சுத்தம் செய்ய வேண்டி ஊழியர் டினு பிலிப் சென்றிருக்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் அறையில் விமான பணிப்பெண் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த டினு பிலிப், அவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளார். அத்துடன் விமானப் பணிப்பெண்னை கட்டிலில் தள்ளி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத விமான பணிப்பெண் தன்னை காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டு உள்ளார். இவரது கூச்சல் சத்தம் கேட்டு விடுதியின் நிர்வாகத்தினர், பக்கத்து அறைகளில் வசிப்பவர்கள் ஓடிவந்தார்கள். அப்போது அவர், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து தூய்மை பணியாளர் டினு பிலிப்பை பிடித்து வைத்து, பாலாரி வட்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் பாலாரி போலீசார் விரைந்து வந்து டினு பிலிப்பை கைது செய்தார்கள். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து டினு பிலிப்பை எர்ணாகுளம் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த நாகலாந்தைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய தூய்மை பணியாளர் முயற்சி செய்த சம்பவம் எர்ணாகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications