ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கே விபத்துக்குக் காரணம்- ரயில்வே
டெல்லி: மசாக் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் தண்டவாளத்தை மூடும் அளவுக்கு தண்ணீர் வந்ததே ரயில் தடம்புரண்ட விபத்துக்குக் காரணம் என்று ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா அருகே மசாக் ஆற்றின் மீது இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தபோது அவை தடம் புரண்டன. அதில் இரு ரயில்களின் 15 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன. விபத்தில் சிக்கிய பெட்டிகளிலிருந்து இதுவரை 300 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள்ளனர். மேலும் பலர் பெட்டிகளில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. பலர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Number of dead rising in the #Harda #Traintragedy .. after two trains derail due to flooded tracks.. over 300 rescued pic.twitter.com/vcxbTiOriC
— Gargi Rawat (@GargiRawat) August 5, 2015 இந்த நிலையில் ரயில் விபத்துக்கு திடீர் வெள்ளமே காரணம் என்று ரயில்வே பாதுகாப்பு வாரியத் தலைவர் ஏ.கே.மிட்டல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் மசாக் ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தண்டவாளமே தெரியாத அளவுக்கு தண்ணீர் ஓடியுள்ளது. டிராக் இருந்த பகுதியில் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் பாதிக்கப்பட்டுள்ளது.
Horrible #TrainTragedy site at Harda. @NewsEighteen collegue @manojkhandekar reports frm MP.@ibnlive @ibnkhabar pic.twitter.com/kDTgIUIozw
— Pranay Upadhyaya (@JournoPranay) August 5, 2015 அருகில் உள்ள ஏதேனும் அணையிலிருந்து அதிகஅளவில் நீர் வெளியேறியதால் இந்த திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
மும்பையிலிருந்து வாரணாசி செல்லும் காமயானி எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை - ஜபல்பூர் இடையிலான ஜனதா எக்ஸ்பிரஸ் ஆகியவை விபத்துக்குள்ளான ரயில்களாகும்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications