ரூ.5 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ.3,000 வரிசலுகை!
டெல்லி: 2016-17ம் நிதியாண்டுக்கான, பட்ஜெட் தாக்கலின் போது ஆண்டுக்கு ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் நடுவேயான வருவாய் பிரிவினருக்கு குறிப்பிட்ட முக்கியமான ஒரு வரி சலுகை அறிவிக்கப்பட்டது.
87ஏ பிரிவின்கீழ் கிடைக்கும், இந்த வருமான வரி சலுகையால் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருவாய் பெறும் 2 கோடி பேர் பயனடைவர் என்று, ஜெட்லி அறிவித்தார்.
இந்த அறிவிப்பு குறித்து ஒரு விளக்கம்: இந்தியாவில், ஆண்டுக்கு, ரூ.2.5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி கிடையாது. ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதமும் வருமான வரி விதிக்கப்படுகிறது.

இதில், ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் நடுத்தர வர்க்க பிரிவை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதால், அவர்களுக்கு எப்போதுமே பிற வருமான வரி செலுத்துவோரை விட சலுகைகள் கொஞ்சம் அதிகம் தரப்படும்.
அப்படி ஒரு சலுகை என்னவென்றால், ஆண்டுதோறும் அந்த வருவாய் பிரிவினர் செலுத்தும் வருமான வரியில் ரூ.2 ஆயிரத்தை வருமான வரித்துறை அவர்களுக்கே திருப்பியளித்துவிடும்.
உதாரணத்திற்கு, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருவாய் ஈட்டும் ஒருவர் வரியாக ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டிவரும் (அவர் செலவீனங்களுக்கு கணக்கு காட்டாத பட்சத்தில்). அப்படி செலுத்தும்போது 2 ஆயிரம் திரும்ப கிடைத்துவிடும் என்பதால் அவர் உண்மையில் செலுத்துவது ரூ.28 ஆயிரமாக இருக்கும்.
அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது ரூ.5 ஆயிரம் திரும்ப கிடைக்கும். இந்த ரூ.5 ஆயிரம் என்பது ஃபிக்ஸ்ட் தொகை. ரூ.20 ஆயிரம் வரி செலுத்துவோருக்கும் அதே ரூ.5 ஆயிரம் திரும்ப கிடைக்கத்தான் செய்யும். எனவே ஜெட்லியின் அறிவிப்பால் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோருக்கு, முன்பைவிட ரூ.3 ஆயிரம் கூடுதல் லாபம் கிடைக்கிறது.
ஒருவேளை ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்திற்கு கீழ் வருமான வரி செலுத்துவோராக இருந்தால் அவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்காது. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வரியாக செலுத்துவோருக்குதான் ரூ.5 ஆயிரம் திரும்ப கிடைக்கும்.
இதுவரை ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.2 ஆயிரம் திரும்ப கிடைத்து வந்தது. எனவே ஜெட்லி அறிவிப்பால், ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான வருமான வரி செலுத்துவோருக்கு பலன் இல்லை. அவர்களுக்கு இழப்புதான்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications