சட்டென சரிந்த "தேஜஸ்" விமானம்.. ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கி விபத்து.. கடைசி நொடிகளில் என்ன நடந்தது
ஜெயப்பூர்: ராஜஸ்தான் ஜெய்சால்மரில் விமானப்படைக்குச் சொந்தமான தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியுள்ளது. தேஜஸ் ரக விமானம் விபத்தில் சிக்குவது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்திய விமானப்படை சார்பில் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். இருப்பினும், சில சமயம் இதுபோல பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துகள் ஏற்பட்டுவிடும்.

விமான விபத்து: அப்படி வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது தான் ராஜஸ்தான் மாநிலத்தில் தேஜஸ் போர் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. ராஜஸ்தான் ஜெய்சால்மரில் விமானப்படைக்குச் சொந்தமான தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அங்குள்ள மாணவர் விடுதி அருகே இந்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
கடைசி நொடிகள்: தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியுள்ளது இதுதான் முதல்முறை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். விமானத்தைக் கட்டுக்குள் கொண்டு வர பைலட் கடுமையாக முயன்றுள்ளனர். இருப்பினும், கடைசி நொடிகளில் அது கட்டுப்பாட்டை இழந்ததால் அது விபத்தில் சிக்கியுள்ளது. இருப்பினும், அது கட்டுக்குள் வராமல் தரையில் விழுந்து நொறுங்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பு இல்லை: நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விமானம் தரையில் மோத சில நொடிகளே இருந்த போது சமயோஜிதமாக செயல்பட்ட பைலட் அதில் இருந்து பாராசூட் மூலமாக வெளியேறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய விமானப்படையின் தேஜாஸ் விமானம் ஒன்று ஜெய்சால்மரில் இன்று பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
நடுவானில் அனாதையாக பறந்த விமானம்! ½ மணி நேரம் கும்பகர்ணன் போல தூங்கிய விமானிகள்.. 150 பயணிகள் உயிர்?
தேஜஸ் விமானம்: தேஜஸ் என்பது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானமாகும். தேஜாஸ் போர் விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் வடிவமைத்தது. இந்திய ராணுவத்தில் உள்ள பழைய மிக் 21 போர் விமானங்களுக்குப் பதிலாக இதை ராணுவத்தில் இணைப்பதே இதன் நோக்கமாகும். கடந்த 2003ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இதற்கு 'தேஜஸ்' அதாவது சமஸ்கிருதத்தில் பிரகாசம் என்று பொருள் என்று பெயர் வைத்தார்.
தேஜஸ் போர் விமானம் என்பது ஒற்றை எஞ்சின் கொண்ட மல்டிரோல் லைட் போர் விமானமாகும். இந்த வகை விமானத்தால் அதிகபட்சமாக 4000 கிலோ வரை சுமந்து செல்ல முடியும். தேஜஸ் விமானம் அதிகபட்சம் 2,205 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இந்த விமானம் இந்தியக் கடற்படையிலும் இருந்தாலும் கூட இது முக்கியமாக இந்திய விமானப்படையில் தான் இருக்கிறது. அப்படி விமானப் படைக்குச் சொந்தமான விமானம் தான் இப்போது விபத்தில் சிக்கியுள்ளது.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications