என்.ஜி.ஓ.க்களுக்கு எதிரான மோடி அரசின் தொடரும் வேட்டை! ஃபோர்டு பவுண்டேசனுக்கும் ஆப்பு ரெடி!!
டெல்லி: என்.ஜி.ஓ. அமைப்பான கிரீன்பீஸுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்த கையோடு ஃபோர்டு பவுண்டேசனுக்கு 'குறி' வைத்துவிட்டது...
மத்தியில் மோடி அரசு அமைந்த பின்னர் என்.ஜி.ஓக்களுக்கு கடிவாளம் போடும் நடவடிக்கை மும்முரமானது... தொடக்கமாக கிரீன்பீஸ் என்.ஜி.ஓ.க்கான இந்திய பதிவை சஸ்பென்ட் செய்து அதன் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியது.

ஃபோர்டு பவுண்டேசன்..
இதனைத் தொடர்ந்து தற்போது ஃபோர்டு பவுண்டேசனுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது மத்திய அரசு. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஃபோர்டு பவுண்டேசனின் நிதியை பெரும்பாலான என்.ஜி.ஓ.க்கள் பெற்று வருகின்றன..

பி.பி.சி. ஆவணப்படம்
அண்மையில் சர்ச்சையை கிளப்பிய பி.பி.சி. தயாரித்த நிர்பயா ஆவணப்படத்துக்கு நிதி உதவி அளித்ததும் இந்த ஃபோர்டு பவுண்டேசனே.. சர்வதேச அளவில் மிகப் பெரிய என்.ஜி.ஓவாக இது திகழ்கிறது..

உள்துறை அமைச்சகம் அனுமதி தேவை
தற்போது வெளிநாட்டு உதவி ஒழுங்குமுறை சட்டத்தின் 46வது பிரிவின் கீழ் உள்துறை அமைச்சகம் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதாவது ஃபோர்டு பவுண்டேசன் அனுப்புகிற நிதியைப் பெறுவதற்கு முதலில் உள்துறை அமைச்சகத்தால் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது.

இந்திய பதிவு ரத்தாகும்..
ஒருவேளை இதனை ஏற்க முடியாது என ஃபோர்டு பவுண்டேசன் மீறத் தொடங்கினால் கிரீன்பீஸ் அமைப்புக்கு நேர்ந்த கதிபோல ஃபோர்டு அமைப்பின் 'இந்திய பதிவு' சஸ்பென்ட் என்கிற நடவடிக்கை பாய்ந்துவிடும்... கடந்த சில மாதங்களில் ஃபோர்டு பவுண்டேசன் அனுப்பி வைத்த 5 மில்லியன் டாலர் நிதி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய நலன்கள்..
இந்த நிதியானது இந்தியாவின் நலன்களுக்கு எதிரான திட்டங்களுக்கும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிற சக்திகளுக்கும் போய் சேருகிறது என்பது மத்திய அரசின் கருத்து.. இதனால்தான் ஃபோர்டு பவுண்டேசன் நிதியை கையாளும் முன்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவை என ரிசர்வ் வங்கியும் அனைத்து வங்கி கிளைகளுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மேலும் பொதுவாக இந்தியாவில் செயல்படுகிற என்.ஜி.ஓக்கள் ஆண்டு நிதி அறிக்கையை தாக்கல் செய்வதும் இல்லை.. என்னதான் அறிவுறுத்தல்கள் விடுத்தாலும் கண்டுகொள்வதும் இல்லை...

இமேஜை நாசமாக்கும் திட்டம்...
உளவுத்துறை தகவல்களின்படி பல என்.ஜி.ஓக்களின் இந்தியாவின் இமேஜை சர்வதேச அளவில் நாசமாக்குகிற திட்டங்களையே தங்களது ப்ராஜெக்டுகளாக வைத்திருக்கின்றனவாம்.. இந்த மாதிரியான என்.ஜி.ஓ.க்கள்தான் ஆண்டு நிதி அறிக்கைகளை தாக்கல் செய்வதே இல்லை..

டாடா, அரவிந்த் கேஜ்ரிவால்...
உதாரணமாக டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் நிறுவனத்துக்கு ரூ1 லட்சம் டாலரை நிதியான ஃபோர்டு பவுண்டேசன் கொடுத்துள்ளது. எதற்காக இந்த பணம் கொடுக்கப்பட்டது என்பதற்காக விவரம் தாக்கல் செய்யப்படவிலை..
இதே போல் அரவிந்த் கேஜ்ரிவால் நடத்திய என்.ஜி.ஓவான கபீருக்கும் ஃபோர்டு பவுண்டேசன் ரூ4 லட்சம் டாலரை நிதியாக கொடுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications