மங்கள்யானுக்கு ரூ. 450 கோடிதான்.. ஆனால் படேல் சிலைக்கோ ரூ. 2,980 கோடி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை நிறுவ மங்கள்யான் விண்கலத் திட்டத்துக்கு ஆன செலவைப் போல நான்கு மடங்கு அதிக தொகையை செலவிடப் போகிறார்கள்.
கிராவிட்டி படத்துக்கு ஆன செலவை விட குறைந்த செலவில் மங்கள்யான் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக பெருமிதத்துடன் கூறியிருந்தார் மோடி. ஆனால் தற்போது மங்கள்யானுக்கு ஆன செலவை விட நான்கு மடங்கு அதிக தொகையை சர்தார் வல்லபாய் படேல் சிலைக்காக குஜராத் அரசு செலவிடப் போகிறது.
கிட்டத்தட்ட ரூ. 2980 கோடி செலவில் இந்த பிரமாண்ட சிலையை குஜராத் அரசு குஜராத்தில் நிறுவவுள்ளது. முதலில் இந்தத் திட்டத்திற்கு ரூ. 903 கோடிதான் ஆகும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திட்டத் தொகை கிடுகிடுவென உயர்ந்து ரூ. 2980 கோடியில் வந்து நிற்கிறதாம்.

விஞ்ஞானிகளிடம் என்ன சொன்னார் மோடி
மங்கள்யான் திட்ட வெற்றியைத் தொடர்ந்து நேற்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில் சிறிய பட்ஜெட்டில் எப்படி பெரிய லாபத்தைப் பெற முடியும் என்பதை இந்திய விஞ்ஞானிகள் உலகுக்கே எடுத்துக் காட்டி விட்டனர் என்று கூறியிருந்தார்.

அவர்களுக்கு மட்டும்தானா...
ஆனால் தற்போது குஜராத் அரசே ரூ. 2000 கோடி அளவுக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை உருவாக்கப் போகிறது. இது மங்கள்யான் திட்டத்துக்கு ஆன செலவை விட 4 மடங்கு அதிகமாகும்.

பேஸ்புக்கில் கலாய்ப்பு
மோடியின் மங்கள்யான் தொடர்பான பேச்சையும், கிராவிட்டி பட பேச்சையும் வைத்து, சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மட்டும் ஏன் மிகப் பெரிய தொகையை மோடி செலவிட விரும்புகிறார் என்று கேட்டு கிண்டலடித்துள்ளனர் பலர்.

மத்திய அரசு ரூ. 200 கோடி
படேல் சிலை அமைப்புப் பணிக்கு மத்திய அரசு ரூ. 200 கோடியை அளிப்பதாக அறிவித்துள்ளது குஜராத் அரசு தன் பங்குக்கு ரூ. 500 கோடி தரவுள்ளது.

திட்டச் செலவு ரூ 2980 கோடியாம்
ஆனால் ஒற்றுமைச் சிலை என்று பெயரிடப்பட்டுள்ள படேல் சிலையின் மொத்தத் திட்டச் செலவு ரூ. 2980 கோடி என்ற அளவில் வந்து நிற்கிறதாம். இதற்கு ஆரம்பத்தில் ரூ. 903 கோடியைத்தான் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூடுதலாக ரூ. 917 கோடி அளவுக்கு பட்ஜெட் எகிறியுள்ளது.

இன்னும் 5 மங்கள்யான் தயாரிக்கலாமே...
பேசாமல் இந்த செலவுக்கு மேலும் 5 மங்கள்யான் போன்ற விண்கலங்களைத் தயாரித்து விடலாம்.. அல்லது மனிதனையே விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தைக் கூட நிறைவேற்றி முடித்து விடலாம்.. நாம் சொல்லவில்லை, சமூக வலைத்தளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications