மே.வங்க புதிய ஆளுநராக கேரளாவை சேர்ந்த சிவி ஆனந்த போஸ் நியமனம்! மமதாவுடனான மோதல் தொடருமா?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக கேரளாவை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்தவர் ஜகதீப் தன்கர். மேற்கு வங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மமதா பானர்ஜி அரசுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்தவர் தன்கர். பின்னர் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆளுநர் பதவியில் இருந்து விலகினார். தற்போது நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார் ஜகதீப் தன்கர்.

இதனால் மேற்கு வங்க மாநிலத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பை மணிப்பூர் ஆளுநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் இணக்கமான போக்கை இல.கணேசன் கடைபிடித்தார். இதனால் சென்னையில் நடைபெற்ற இல.கணேசன் இல்ல நிகழ்ச்சிக்கு அண்மையில் மமதா பானர்ஜி வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முழுநேர ஆளுநராக சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவின் கோட்டயம் மாவட்டம் மன்னானம் என்ற இடத்தில் பிறந்த சிவி ஆனந்த போஸ் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. 1951-ம் ஆண்டு பிறந்த சிவி ஆனந்த போஸ், மேகாலயா மாநில அரசுக்கான ஆலோசகர் பதவியில் இருக்கிறார்.
கேரளாவில் முன்னாள் முதல்வர் கருணாகரனுக்கு ஆலோசகராக பதவி வகித்தார் ஆனந்த போஸ். பின்னர் 2019-ம் ஆண்டு பாஜகவில் அதிகாரப்பூர்வமாகவும் இணைந்தார். மாவட்ட ஆட்சியர் முதல் தலைமை செயலாளர் பதவி வரை பணியாற்றியவர் ஆனந்த போஸ். தற்போது மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மமதா பானர்ஜியுடன் இணக்கமான போக்கை தொடருவாரா? மோதல் போக்கை கடைபிடிப்பாரா? என்பது எதிர்பார்ப்பு.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications