ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உடைந்தது! தனி கட்சி தொடங்கிய சம்பாய் சோரன்! பாஜகவுடன் கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் அம்மாநிலத்தின் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் பிளவு ஏற்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் ஓரிரு நாட்களிலேயே 30,000 முதல் 40,000 பேரை திரட்ட முடியும் என்கிற போது ஒரு வாரத்துக்குள் புதிய கட்சி தொடங்கப்பட்டுவிடும் எனவும் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது. இதனால் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது.

Jharkhand Assembly Election 2024 Champai Soren 2024

ஜார்க்கண்ட் களம்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்)- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் ஜேஎம்எம், காங்கிரஸ், பாஜக ஆகியவை பிரதான கட்சிகள். ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலிலும் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி தொடர இருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்த முறை ஜார்க்கண்ட்டில் பீகாரின் ஜேடியூ- ஐக்கிய ஜனதா தளமும் களம் காண இருக்கிறது.

பாஜகவில் சம்பாய் சோரனுக்கு எதிர்ப்பு: இந்த நிலையில் ஜார்க்கண்ட்டில் ஆளும் ஜேஎம்எம் கட்சி பிளவுபட்டுள்ளது. ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன், அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறைக்கு சென்ற போது முதல்வரானவர் சம்பாய் சோரன். ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையாகி மீண்டும் முதல்வரானார். இந்த அதிருப்திதான் சம்பாய் சோரன், ஜேஎம்எம் கட்சியில் இருந்து வெளியேற காரணம். சம்பாய் சோரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 6 பேரும் பாஜகவில் விலக இருப்பதாக கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்பட்டது. இதற்கேற்ப சம்பாய் சோரன் டெல்லியில் முகாமிட்டிருந்தார். அதே நேரத்தில் சம்பாய் சோரனை பாஜகவில் சேர்க்க, ஜார்க்கண்ட் தலைவர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

புதிய அரசியல் கட்சி: இந்த நிலையில் டெல்லியில் இருந்து ஜார்க்கண்ட் திரும்பிய சம்பாய் சோரன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இனி புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. நான் அரசியலில் இருந்து ஒருபோதும் விலகப் போவது இல்லை. என்னுடைய ஆதரவாளர்களிடம் இருந்து மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடனான அத்தியாயம் முடிவடைந்துவிட்டது. நான் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறேன்.

ஒரே வாரத்தில் கட்சி: சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் குறுகிய காலத்தில் புதிய கட்சியா? என்பது உங்கள் கேள்வியாக இருக்கலாம். எனக்கு அதில் பிரச்சனை இல்லை. நான் நினைத்தால் ஓரிரு நாட்களிலேயே 30,000 முதல் 40,000 பேரை திரட்ட முடியும். ஆகையால் ஒரே வாரத்துக்குள் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும்.

புதிய கூட்டணிக்கும் தயார்: என்னுடைய புதிய கட்சியை நான் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன். என்னுடைய பயணத்தில் புதிய நண்பர்கள் கிடைத்தால் (கூட்டணி) இணையவும் தயாராக இருக்கிறேன். ஜார்க்கண்ட் மக்களுக்காக, மாநிலத்துக்காக சேவையாற்ற தயாராக இருக்கிறோம். புதிய கட்சி, அடுத்த செயல் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அனைத்தும் தெளிவாக தெரிந்துவிடும். இவ்வாறு சம்பாய் சோரன் கூறினார்.

பாஜகவுடன் கூட்டணி?: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உருவாக்கப்படும் சம்பாய் சோரனின் புதிய கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே வாய்ப்பிருக்கிறது. பஞ்சாப்பில் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் காங்கிரஸில் இருந்து வெளியேறி தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் என்பதும் வரலாறு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+