லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி காலமானார்
லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி காலமானார். அவருக்கு வயது 89.
Recommended Video

கொல்கத்தா: லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 89.
சோம்நாத் சட்டர்ஜி 1929ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அசாம் மாநிலம் திஸ்பூரில் பிறந்தார். 89 வயதான சோம்நாத் சட்டர்ஜி 10 முறை லோக்சபா எம்பியாக பதவி வகித்துள்ளார்.
1968ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவில் இடம் பெற்றார். நாட்டில் அதிக ஆண்டுகள் எம்பியாக இருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சோம்நாத் சட்டர்ஜி.

40 நாட்கள் சிகிச்சை
நாடாளுமன்ற சபாநாயகராக 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இருந்தவர். சோம்நாத் சட்டர்ஜி சிறுநீரகம் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று திடீர் மாரடைப்பு
தொடர் சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இன்று காலை காலமானார்
மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், சோம்நாத் சட்டர்ஜி இன்று காலை காலமானார். 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும், சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்யாததால், அக்கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைவுக்கு இரங்கல்
சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications