பெருகும் எதிர்பார்ப்பு.. கட்சிக்கு மீண்டும் திரும்பும் முக்கிய தலைகள்! குஷியில் பஞ்சாப் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸிலிருந்து பல்வேறு கட்சிகளுக்கு தாவியிருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இன்று மீண்டும் கட்சியில் இணைகின்றனர். சண்டிகரில் உள்ள மாநில தலைமையகத்தில் நடைபெறும் விழாவில் இவர்கள் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்படுகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்தமுறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால், சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இதனையடுத்து இரு கட்சிகளுக்கு இடையேயும் தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருந்தாலும், மாறி மாறி சரமாரியான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக தங்களிடம் 32 எம்எல்ஏக்கள் தொடர்பில் இருப்பதாகவும், தாங்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என காங்கிரஸ் கொக்கரித்து வந்தது.

Former ministers and MLAs who defected from the Congress in Punjab are rejoining the party today

காங்கிரஸை பழிவாங்க சரியான நேரம் எதிர்ப்பார்த்திருந்த ஆம் ஆத்மி அரசு, 8 ஆண்டு பழைய போதை பொருள் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சுக்பால் கெய்ராவை அலேக்காக தூக்கி உள்ளே வைத்து விட்டது. இது இரு கட்சிகளுக்கு இடையேயான மோதல் போக்கை மேலும உக்கிரமடைய வைத்திருக்கிறது. எனவே காங்கிரஸ் ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பஞ்சாயத்துகளுக்கு மானியம் வழங்குவதில் தொகுதி மேம்பாட்டு திட்ட அதிகாரி ஊழல் செய்வதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குல்பீர் சிங் ஜிரா தொண்டர்களுடன் திட்ட அதிகாரி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்.

போராட்டம் 3 நாட்களாக நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் அவர் அதிரடிாயாக கைது செய்யப்பட்டுள்ளார். அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததால்தான் கைது செய்தோம் என காவல்துறை விளக்கமளித்துள்ளது. இப்படி இருக்கையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகா, சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) என வெவ்வேறு கட்சிகளுக்கு தாவியிருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீண்டும் காங்கிரஸில் சேர முன்வந்தனர். முன்னதாக கடந்த 13ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலைச் சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் சிலர் கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து இன்றும் சிலர் இணைகின்றனர்.

எனவே இந்த விழாவை காங்கிரஸ் சிறப்பாக நடத்த இருக்கிறது. ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சியின் பழிவாங்கலில் கட்சி சிக்கியுள்ள நிலையில், புதிய வரவு கட்சிக்கு பலமளிக்கும் என்றும், கட்சி மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கை அதிகமாகும் எனவும் தலைமை நம்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+