சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வனி குமார் தற்கொலை!!
சிம்லா: ''வாழ்க்கையில் விரக்தி அடைந்து விட்டேன், இதனால் நான் அடுத்த பயணத்திற்கு செல்கிறேன்'' என்று தற்கொலைக்கான காரணத்தை முன்னாள் சிபிஐ இயக்குநர் அஸ்வனி குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு உடல் உபாதைகள் இருந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து இந்தக் கடிதத்தை போலீசார் எடுத்துள்ளனர். இன்று மாலை நடைபயிற்சியும் சென்று வந்துள்ளார். பின்னர் மேல் மாடியில் இருக்கும் பூஜை அறைக்கு சென்றுள்ளார். அப்போது இவரது மனைவி, மகன், மகன் அனைவரும் வீட்டின் கீழ் அறையில் இருந்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரிய வரும் என்று சிம்லா போலீஸ் எஸ்பி மோஹித் சாவ்லா தெரிவித்துள்ளார். ஆனால், மன உளைச்சலில் இருந்தாரா என்பது குறித்து அஸ்வனி குமாரின் குடும்பத்தினர் இன்னும் உறுதி செய்யவில்லை.

இதுகுறித்து ஹிமாச்சலப் பிரதேச போலீஸ் டிஜிபி சஞ்சய் குன்றா கூறுகையில், ''மாலை நடைபயிற்சி செல்வதற்காக சென்றுள்ளார். இதையடுத்து வீட்டின் மேல் மாடியில் பூஜை செய்வதற்காக சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது'' என்றார்.
நாகலாந்து, மணிப்பூர் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவர் ஆகஸ்ட் 2006 முதல் ஜூலை 2008 வரை ஹிமாசலப் பிரதேசத்தின் டிஜிபி ஆகவும் இருந்துள்ளார்.
1973வது குழுவில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்று இருந்தார். 2014ல் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராகவும், 2013ல் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராகவும் சிறிது காலம் பொறுப்பு வகித்து வந்தார்.
இதற்கு முன்னதாக 2008 முதல் 2010 வரை சிபிஐ இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது, ஹேம்ராஜ் கொலை, சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்குகளை கையாண்டு வந்தார் .
70 வயதான இவரது உடலை போலீசார் மீட்டு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். 174 குற்றவியல் சட்டத்தின் கீழ் சோட்டா சிம்லாவில் இருக்கும் கிழக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.
சிர்மவுர் மாவட்டத்தில் இருக்கும் நஹன் என்ற இடத்தில் பிறந்த அஸ்வனி குமார் 1973ல் இந்திய போலீஸ் பணியில் சேர்ந்தார். 1985ல் சிம்லா மாவட்ட போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றினார். பின்னர் 1990 எஸ்பிஜி குழுவில் இடம் பெற்றார்,
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications