தேவகவுடா 40 நாட்களில் 2 முறை ஜம்மு காஷ்மீர் விசிட்.. வரவேற்ற பரூக் அப்துல்லா- கடுப்பில் காங்கிரஸ்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவடைந்து தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜேடிஎஸ் கட்சியின் நிறுவனர் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜம்மு காஷ்மீர் சென்றிருப்பதும் அவரை விமான நிலையத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வரவேற்றிருப்பதும் கவனம் பெற்றுள்ளது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கடந்த 40 நாட்களில் 2-வது முறையாக தேவகவுடா பயணம் மேற்கொண்டிருப்பதும் பேசு பொருளாகி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ்-சிபிஎம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சராக ஒமர் அப்துல்லா பதவியேற்க இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வராக தாம் பதவியேற்றாலும், டெல்லியில் ஆளும் மத்திய பாஜக அரசுடன் இணக்கமாகவே செயல்படுவோம். டெல்லியுடன் மோதுவதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. இப்படி பேசுவதற்காக பாஜகவை ஆதரிக்கிறோம்; பாஜக கொள்கைகளை ஏற்கிறோம் என்பது அல்ல. மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான மாநில அந்தஸ்துக்காக தீர்மானம் நிறைவேற்றி பிரதமர் மோடியை சந்திப்போம். அதே நேரத்தில் ரத்து செய்யப்பட்ட 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கும் வாய்ப்பில்லை. இது தொடர்பாக மக்களை முட்டாள்களாக்க விரும்பவில்லை எனவும் ஒமர் அப்துல்லா கூறியிருந்தார்.
ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய பாஜக அரசுடன் இணக்கத்தை ஒமர் அப்துல்லா விரும்புகிறார் என்பதாக பார்க்கப்பட்டாலும் பாஜக கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிதான் தேசிய மாநாட்டுக் கட்சி. காங்கிரஸ் கட்சியோ வெறும் 6 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சி நினைத்தால் காங்கிரஸை கழற்றிவிட்டு பாஜகவுடன் எப்போது வேண்டுமானாலும் கை கோர்க்கலாம்; காரணமாக ஜம்மு காஷ்மீர் மக்கள் நலன் கருதி என சொல்லிவிட்டும் போகலாம்.
மேலும் ஜம்மு காஷ்மீரில் ஜம்மு பிராந்திய மக்கள் பாஜகவையும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் தேசிய மாநாட்டுக் கட்சியையும் நம்பியே வாக்களித்துள்ளனர். இதனால் வரும் காலத்தில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸை துடைத்தழிக்க தேசிய மாநாட்டுக் கட்சியை பாஜக ஆயுதமாகவும் பயன்படுத்தக் கூடும்.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சியின் நிறுவனரான முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று ஶ்ரீநகர் வருகை தந்தார். ஶ்ரீநகர் விமான நிலையத்தில் அவரை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா வரவேற்றார். இருவரும் ஹோட்டல் ஒன்றில் சில மணிநேரம் ஆலோசனை நடத்தினர். கடந்த 40 நாட்களுக்கு முன்னரும் தேவகவுடா ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தார் . அப்போது புனித யாத்திரைக்கு வந்ததாக தேவகவுடா கூறியிருந்தார். 91 வயதாகும் தேவகவுடா 40 நாட்களில் 2-வது முறையாக ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டிருப்பதும் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுடன் நீண்ட ஆலோசனை நடத்தியிருப்பதும் காங்கிரஸ் கட்சியை அதிருப்தி அடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications