நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் சம்மன்!
டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஏப்ரல் 8-ந் தேதி நேரில் ஆஜராகக் கோரி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் 2005 ஆம் ஆண்டு குமார் மங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஷாவின் தலபிரா நிலக்கரி சுரங்கம் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது வழக்கு.

குமார் மங்கலம் பிர்லா, மன்மோகன்சிங்குக்கு 2 கடிதங்கள் எழுதி கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த ஒதுக்கீடு நடந்தது என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்த கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதால் அடுத்த கட்ட விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்டுள்ள மன்மோகன்சிங் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித் துறை செயலாளர் பி.சி. பாரக் உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications