சிறுபான்மையினர் என்ற சொல்லை மறு ஆய்வு செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
மும்பை: சிறுபான்மை என்ற சொல்லை மறுவரையறை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று மும்பை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டால் தான் நம்முடைய நான்கு பக்க வளர்ச்சியும் சாத்தியமாகும்.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் விரும்பத்தக்க வளர்ச்சியை அடைய முடிந்தது என்றால், அதற்கு காரணம் மக்கள் தொகை வளர்ச்சி மீது அவர்கள் விதித்த கட்டுப்பாடு தான். அனைத்து குடிமக்களுக்கும் ஏற்ற வகையில், சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு, 'பொதுவான மக்கள் தொகை கொள்கை'யை வகுக்க வேண்டும்.
குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தொகையை கருத்தில் கொண்டு ‘சிறுபான்மை' என்ற சொல்லை மறுவரையறைக்கு உட்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த சமூகம் அதிகமாக வசிக்கிறார்களோ அவர்கள் சிறுபான்மையினர் என்று அழைக்கப்பட முடியாது. இந்தியா சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் கடந்துவிட்டன. குறிப்பிட்ட மதத்தினரை மைனாரிட்டி என்று அழைப்பதில், அளவீடுகளை நிறுவுவதற்கான காலம் வந்துவிட்டது
பெரும்பாலான கிராமங்கள், தாலுகாக்கள் மற்றும் மாவட்டங்களில் 70 சதவீத மக்கள் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆனாலும், சிறுபான்மை அந்தஸ்தை அவர்கள் அனுபவிக்கின்றனர். இதை அகற்றி, அனைவருக்கும், நலன் சென்று சேர வேண்டும். இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications