பலாத்காரத்தை தடுக்க முயன்ற பெண்ணின் காது அறுப்பு... உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு
உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பல் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளது. இதனை அந்தப் பெண் தடுக்க முயன்றதால் அவரது காதை அந்தக் கும்பல் அறுத்துள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் அருகே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய 4 பேர் முயன்றுள்ளனர். அதனை அந்தப் பெண் தடுக்க முயன்றதால் அந்த கும்பல் அவரது காதை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். மேலும் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் கடும் கோபம் கொண்ட அந்த கும்பல், பெண்ணின் காததை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள பாக்பட் தொகுதி பா.ஜ.க எம்பி சத்தியபால் சிங், இந்த புகார் முற்றிலும் பொய்யான ஒன்று என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, தான் சமாஜ்வாடி கட்சியிடம் பேசியதாகவும் இந்த சம்பவம் டிசம்பர் 31ஆம் தேதி நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பலாத்கார முயற்சிகள் ஏதும் நடக்கவில்லை என்ற சத்யபால் சிங் பக்கத்துவீட்டாரிடம் ஏற்பட்ட சண்டையில் அந்தப் பெண்ணின் காது அறுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications