டெல்லி முழுவதும் ”ஃப்ரீ வைபை”- நிறுவனங்களுடன் விறுவிறுப்பாக பேச்சுவார்த்தையில் ஆம் ஆத்மி
டெல்லி: டெல்லியில் தலைநகர் முழுவதும் இலவச "வைபை" இணைய வசதியினை விரைவாக அறிமுகப்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆம் ஆத்மி கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மாநிலம் முழுவதும் இணையதள உபயோகத்துக்காக இலவச வைபை வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டு இருந்தது.

தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதற்கான பேச்சுவார்த்தையை கட்சி தற்போதே தொடங்கி விட்டது.
அதன்படி, பேஸ்புக் நிறுவனம் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்களுடன் ஆம் ஆத்மி தன்னார்வ தொண்டர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஐ.டி நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக பணி செய்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "இந்த வசதி 30 நிமிட விளம்பரத்துடன் செயல்படுத்தப்படும். இந்த விளம்பரம் மூலம் அரசுக்கு ரூபாய் 100 கோடி வருமானமும் கிடைக்கும்.
இந்த விளம்பர திட்டத்தை கெஜ்ரிவால் அங்கீகரிப்பாரா எனத் தெரியவில்லை. எனினும் அவரிடம் இது குறித்து விளக்கப்படும்" என்றனர்.
இந்த இலவச திட்டப்படி டெல்லியில் வைபை மூலம் இணையதளம் உபயோகிப்பவர்கள் முதல் 30 நிமிடங்களுக்கு பணம் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications