இலவசங்கள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு: உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான அஷ்வின் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சி.டி.ரவிகுமார், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டது.
அந்த வழக்கில் இன்று இலவசங்கள் தொடர்பான இந்த வழக்கை வேறு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தவிட்டுள்ளார். மேலும், இலவசங்களை அறிவிப்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளார்.
இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவச வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது என்று கூறிய அதேவேளையில், இலவசங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
- இலவசங்கள் அல்ல, ஏற்றத்தாழ்வை போக்கும் சீர்திருத்த கருவிகள்: ஜெ. ஜெயரஞ்சன்
- இலவசமா? மக்கள் நலத் திட்டமா? இதனால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி என்ன?
மேலும் இலவசங்கள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஏன் கருத்து கேட்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியிருந்ததோடு, இலவசங்கள் குறித்த விவாவதம் தேவையெனவும் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை வேறு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, மத்திய அரசு வல்லுநர் குழுவை அமைத்து ஆராயவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













Click it and Unblock the Notifications