பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு.. மின் மானியமும் ரத்து.. அதிர வைத்த பஞ்சாப் அரசு! என்ன காரணம்?
சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்று 2.5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பெட் ரோல், டீசல் விலை 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. பஞ்சாபில் அருகில் உள்ள யூனியன் பிரதேசமான சண்டிகாரில் பஞ்சாபை விட பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைவு ஆகும். இது மட்டும் இன்றி மின் கட்டணத்தில் ரூ. 3 மானியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். பஞ்சாப் மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில், அரசின் வருவாயை பெருக்கும் விதமாக பெட் ரோல், டீசல் மீதான வாட் வரியை அதிகரித்துள்ளது. இதனால் பெட் ரோல் விலை லிட்டருக்கு ரூ.61 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 92 பைசாவும் உயர்ந்துள்ளது.

பெட் ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் பஞ்சாபில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட் ரோல், டீசலை பொறுத்தவரை மத்திய அரசின் கலால் வரியை தவிர மாநில அரசுகள் தனியாக வாட் வரியை விதிக்கின்றன. பெட் ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தாலும் இது தொடர்பாக மாநில அரசுகளிடம் இவ்விவகாரத்தில் மாநில அரசுகளிடம் கருத்தொற்றுமை ஏற்பட்டால் ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
இதனால், மாநிலங்கள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை மாநிலத்திற்கு மாநிலத்திற்கு மாறுபடும். பஞ்சாபின் மொஹாலியில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.97.01 ஆகவும், டீசலின் விலைரூ.87.21ஆகவும் உள்ளது. தற்போது வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசலின்விலை உயரும். இது அம்மாநில வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது மட்டும் இன்றி மின் கட்டணத்தில் ரூ. 3 மானியமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த மானியத்தையும் ரத்து செய்துள்ளது பகவந்த மான் அரசு, அரசின் வருவாயை பெருக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கபட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்துக்கு மானியம் வழங்குவதால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை கூடுதல் செலவாகிறது அம்மாநில் அரசு அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியான 300 யூனிட் வரை இலவசம் என்ற திட்டம் தொடரும் எனவும் பஞ்சாப் நிதித்துறை அமைச்சர் ஹர்பால் சிங் சீமா கூறினார். கடும் நிதி நெருக்கடியில் பஞ்சாப் மாநில அரசு தள்ளாடி வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்திற்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம், பென்ஷன் ஆகியவற்றைக் கூட சரியான நேரத்தில் போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
4 நாட்கள் கழித்தே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது. பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்று 2.5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பெட் ரோல், டீசல் விலை 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. பஞ்சாபில் அருகில் உள்ள யூனியன் பிரதேசமான சண்டிகாரில் பஞ்சாபை விட பெட் ரோல், டீசல் விலை ரூ.5 குறைவு ஆகும். அதேபோல ஜம்மு காஷ்மீரிலும் பெட்ரோல், டீசல் விலை பஞ்சாபை விட குறைவாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியது மட்டும் இன்றி சொத்து பதிவு கட்டணம், வாகன பதிவு கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications