காமன்வெல்த் மாநாட்டிற்கு மன்மோகன்சிங் போவாரா?… பிரதமரை சந்தித்த வாசன்

Subscribe to Oneindia Tamil

Manmohan singh and GK Vasan
டெல்லி: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழக மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான முடிவை பிரதமர் மன்மோகன் சிங் எடுப்பார் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமரை சந்திந்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய வாசன் இதனை தெரிவித்தார்.இது குறித்து அவர் தம்மிடம் உறுதியளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மவுனம்

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி எதுவும் தகவல் வெளியிடாமல் பிரதமர் மன்மோகன்சிங் வழக்கம் போல் மவுனமாக இருந்தார். இதற்கிடையே வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது இலங்கை பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தார். அப்போதே தமிழர்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது உறுதியானது.

உயர்மட்டக் குழுக் கூட்டம்

இந்த நிலையில் இது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டம் புதனன்று டெல்லியில் நடந்தது. அதில் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா அவசியம் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே பிரதமர் மன் மோகன்சிங் நவம்பர் இரண்டாவது வாரம் இலங்கை செல்கிறார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை தடுக்க, வேண்டுமானால் கொழும்பு மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்தால்தான் ஈழத்தமிழர்களுக்கு மேம்பாட்டு பணிகள் செய்வதை உறுதிப்படுத்த முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள்.

எனவே இந்த சர்ச்சையில் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை ஓரம் கட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்து விட்டனர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே இன்று பிரதமரை சந்தித்து தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார் அமைச்சர் ஜி.கே.வாசன். காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டால் அமைச்சர் பதவியை வாசன் ராஜினாமா செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+