பெங்களூரில் 5 பேர் கும்பலால் மைனர் பெண் பலாத்காரம்… 2 பேர் கைது
பெங்களூர்: பெங்களூரில் 16 வயது இளம் பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் சினிமாவுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இளம் பெண்ணை சீரழித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் எச்.ஏ.எல் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்பவரின் மகள் பிரியா (வயது 16). 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ள செல்வி, பெற்றோருடன் சேர்ந்து வியாபாரம் செய்து வருகிறாள்.
இவர்களது வீட்டிற்கு இஸ்லாம்புராவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் உசேன் என்பவர் அடிக்கடி வந்து செல்வாராம். அப்போது பிரியாவிற்கும் உசேனுக்கும் நல்ல அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று உசேன், பிரியாவிற்கு போன் செய்து சினிமாவுக்கு அழைத்தாராம். இதையடுத்து சிறுமி செல்வியும் உசேனுடன் ஆட்டோவில் தியேட்டருக்கு சென்றிருக்கிறாள்.
சினிமா முடிந்து வீட்டிற்கு வரும் போது ஜெகதீஸ்நகரில் ஆட்டோவை நிறுத்தி விட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பிரியாவை அழைத்து சென்ற உசேன், தனது நண்பர்களான வாசிம், ஜாபர், அப்துல்லா, மற்றொருவருடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு வந்த பிரியா, இதுகுறித்து தனது பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்கவில்லையாம்.
இதற்கிடையில், கடந்த 2 நாட்களாக பிரியாவின் நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் தெரிந்தது. மேலும் அவள் எப்போதும் சோர்வாகவே இருந்திருக்கிறாள். அதுபற்றி செல்வியிடம், அவளது பெற்றோர் கேட்டபோது, உசேனும் அவனது நண்பர்களும் தன்னை பலாத்காரம் செய்த சம்பவத்தை கூறினாள்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், , உசேன் உள்பட 5 பேர் மீது எச்.ஏ.எல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து உசேன் உள்பட 5 பேரையும் தேடி வந்தனர். இதில் உசேன்,வாசிம் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவான மற்ற 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
5 பேர் கும்பலின் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பிரியா பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications