ராணுவ வீரரின் மகள் குருமெஹரை கேலி செய்வது இழிவானதாகும்.. கம்பீர் காட்டம்
சமூக வலைதளத்திதில் ராணுவ வீரரின் மகள் குருமெஹர் கவுர்க கேலி செய்யப்படுவதற்கு கிரிக்கெட் வீரர் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சமூக வலைதளத்திதில் ராணுவ வீரரின் மகள் குருமெஹர் கவுர்க கேலி செய்யப்படுவதற்கு கிரிக்கெட் வீரர் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
ராணுவ வீரர் மந்தீப் சிங்கின் மகன் குருமெஹர் கவுர். இவர் அண்மையில் தனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை போர்தான் கொன்றது என்று அட்டையில் எழுதிக் காண்பித்து இந்திய நாட்டில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டிருப்பதை பதிவு செய்திருந்தார்.
இவரது இந்த நடவடிக்கைக்கு இந்திய நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன. சமூக வலைதளங்கள் முழுக்கப் பரவிய அந்தப் படத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் வேறு பதில் வைத்திருந்தார்.

கிண்டல் செய்த ஷேவாக்
குருமேஹர் கௌர் எழுதிக் காண்பித்ததைப் போலவே ஒரு அட்டையில் இரண்டு முறையும் முச்சதங்கள் அடித்தது நான் அல்ல. என் பேட்தான் அதைச் செய்தது என்று குருமேஹர் கௌரின் என் தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல. போர்தான் என்ற வாசகத்தை கிண்டல் செய்திருந்தார்.

வீடியோ வெளியிட்ட கம்பீர்
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகம் பேசாத கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இதற்கு கண்டம் தெரிவித்து பேசியிருக்கும் ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கருத்து சுதந்திரம் இருந்தது
அதில் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் முழுமையாக இருந்தது. அதனை நாங்கள் கற்றோம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் அதனை செயல்படுத்தினோம்.

ராணுவத்தினரை மதிப்பவன்
குருமெஹர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாமே தவிர கேலி செய்யக்கூடா-து என்று கூறியுள்ளார். மேலும் தான் ராணுவத்தினரை மிகவும் மதிப்பவன் என்றும் கம்பீர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம் தருகிறது
நாட்டுக்காகவும் நமக்காகவும் ராணுவத்தினர் செய்யும் சேவையை ஒப்பிட முடியாது. எனினும் சமீபத்திய நிகழ்வுகள் என ஏமாற்றத்தை தருகிறது.

சமாதான நோக்கில் கருத்து
கருத்து உரிமை உள்ள ஒரு சுதந்திர நாட்டில் நாம் வாழ்ந்து வருகிறோம். தந்தையை இழந்த ஒரு மகள் சமாதான நோக்கில் போரின் கொடுமைகளை குறித்த பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.

கேலி செய்ய வாய்ப்பல்ல
மற்றவர்கள் தங்களின் தேசப்பற்றை காட்டவும் அவரை கும்பலாக சேர்ந்து கேலி செய்யவும் வாய்ப்பல்ல என்றும் கம்பீர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கேலி செய்வது இழிவானது
மற்ற குடிமக்களைப் போலவே குருமெஹரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதனை அனைவரும் ஒப்புக்கொள்கிறீர்களோ இல்லையோ கேலி செய்வது மிகவும் இழிவான ஒன்று. இவ்வாறு கிரிக்கெட் வீரர் கம்பீர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications