For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஜோரா உனது வேதனையை இந்த பூமி தாங்காது"... கல்வி செலவை ஏற்றார் கம்பீர்!

தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்த ஜம்மு- காஷ்மீர் மாநில போலீஸ்காரர் அப்துல் ரஷீதின் மகள் ஜோராவின் கல்வி செலவு முழுவதையும் ஏற்பதாக கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு வீரமரணம் அடைந்த அப்துல் ரஷீதின் மகள் ஜோராவின் கல்வி செலவு முழுவதையும் கிரிக்கெட் வீரர் காம்பீர் ஏற்கவுள்ளார்.

Recommended Video

    கண்ணீர் விடும் சிறுமிக்கு உதவும் கவுதம் கம்பீர்-வீடியோ

    அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைத் தொடர்ந்து அங்கு
    கடந்த 28-ஆம் தேதி போலீஸ் படை தேடுதல் வேட்டையில் இறங்கியது. இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    தீவிரவாதிகள் மறைந்திருந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீஸாரும் சுட்டனர். இந்தத் தாக்குதலில் போலீஸ் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது.

    அப்துல் ரஷீத் வீரமரணம்

    அப்துல் ரஷீத் வீரமரணம்

    காவல்துறை உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்தார். இது துயரச் சம்பவம் ரஷீத்தின் மகள் ஜோராவை உலுக்கி விட்டது. தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அவர் அழுத அழுகை அனைவரையும் நிலை குலைய வைத்து விட்டது.

    பூமி தாங்காது

    இந்நிலையில் ஜோராவுக்கு ஆதரவு கூறும் வகையில் கிரிக்கெட் வீரர் தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், ஜோரா, தயவு செய்து அழுவதை நிறுத்திவிடு. தந்தையை இழந்து நீர் விடும் கண்ணீரின் எடையை இந்த பூமி மாதா தாங்குமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. வீரமரணம் அடைந்த உனது தந்தை அப்துல் ரஷீத்துக்கு வீர வணக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    உன் கனவுகளை நனவாக்கும்...

    இதேபோல் மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர் கூறுகையில், ஜோரா நீ தூங்குவதற்கு என்னால் தாலாட்டு பாட முடியாது. ஆனால், உன் கனவுகளை நனவாக்கும் விதமாக உனக்கு உதவ என்னால் முடியும்.உனது படிப்புக்கு ஆகும் முழு செலவை நான் ஏற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஜோராவுக்கு டிஐஜி ஆறுதல்

    ஜோராவுக்கு டிஐஜி ஆறுதல்

    ஜோராவின் கண்ணீர் இதயத்தை கிழிக்கிறது என்று ஜம்மு- காஷ்மீர் மாநில டிஐஜி ஒருவர் கடிதத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் நடந்த நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு ஐபிஎல்லில் கிடைத்த பணத்தை நன்கொடையாக அளித்தார் காம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Gautam Gambhir on Tuesday pledged to fund the education of Zohra, the daughter of a slain Jammu and Kashmir cop ASI Abdul Rashid
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X