ஜோரா, உனது கண்ணீர் இதயத்தை குத்திக் கிழிக்கிறது...!
ஜம்மு- காஷ்மீரில் காவலர் ஒருவர் தீவிரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணமடைந்ததால் அவரது மகளுக்கு ஆறுதலாக கடிதம் காவல் துறை சார்பில் டிஐஜி கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video

ஜம்மு: தீவிரவாத தாக்குதலில் காவல் துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்ததால் அந்த இழப்பை தாள முடியாமல் அவரது மகள் அழுத காட்சி அனைவரின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது என்று காஷ்மீர் டிஐஜி ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். அந்த சிறுமிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைத் தொடர்ந்து அங்கு திங்கள்கிழமை போலீஸ் படை வேட்டையில் இறங்கியது. இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
தீவிரவாதிகள் மறைந்திருந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீஸாரும் சுட்டனர். இந்தத் தாக்குதலில் போலீஸ் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது.

போலீஸ்காரர் பலி
காவல்துறை உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்தார். இது துயரச் சம்பவம் ரஷீத்தின் ஜோரா உலுக்கி விட்டது. தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அவர் அழுத அழுகை அனைவரையும் நிலை குலைய வைத்து விட்டது.

நெஞ்சையே உலுக்கியது
தந்தையின் உடலை பார்த்து அவர் அழுதது போலீஸாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆறுதல் கூறினாலும் புரியாத வயதில் உள்ள அந்த பிஞ்சு குழந்தையை தேற்றுவதற்காக டிஐஜி ஒருவர் ஆறுதல் கடிதம் எழுதி அதை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அன்புக்குரிய ஜோரா
அந்த கடிதத்தில், என் அன்புக்குரிய ஜோரா, உனது தந்தையின் உயிர் தியாகம் காலத்துக்கு நிலைத்திருக்கும். இது ஏன் நடந்தது என்று புரிந்து கொள்ள நீ மிகவும் சிறிய வயது குழந்தை. உன் தந்தையின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மனிதகுலத்தின் எதிரிகள்.

சமூகத்தை பாதுகாக்க...
உன் தந்தையும் நாங்களும் வீரம் மற்றும் தியாகத்தின் சின்னங்கள். சமூகத்தை பாதுகாக்க எங்களை போன்ற காவலர்கள் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டும், மீள முடியாத அதிர்ச்சியிலும் உள்ளனர். இவையெல்லாம் உண்மையில் எங்களை பெருமைப்படுத்தும் வகையில் நல்லதொரு சரித்திரத்தை உருவாக்கும்.

மறக்க முடியாது
நம்முடன் பணியாற்றியவர்கள், நமக்கு கதாநாயகனாக தெரிந்தவர்களை நம்மால் மறக்க இயலாது. இந்த மோசமான நிலையில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதை நினைவில் வைத்துக் கொள். உன்னுடைய ஒவ்வொரு துளி கண்ணீரும் எங்கள் மனதில் வலியை ஏற்படுத்துகிறது. இதயத்தை நொறுக்குகிறது.

உறுதிமொழி முக்கியம்
இந்த சமூகத்தை காக்க சேவையாற்றுவது என்ற எங்கள் நோக்கம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் வலிமையை வழங்க வேண்டும். இந்த காவலர் சீருடையை நாங்கள் அணிந்த போது நாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி மிகவும் உன்னதமானது.

நினைவலைகள்
எங்கள் ஆன்மாவும் அர்ப்பணிப்பும் மாற்றத்தின் தூண்டுகோலாக இருக்கட்டும். இது அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான கருத்தாக அமையட்டும். உண்மையான காவலராக நாட்டுக்கு தியாக செய்த உன் தந்தையின் நினைவுகள் எங்களுடன் எப்போதும் இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஏராளமான வாழ்த்துகளுடன், ஜம்மு காஷ்மீர் காவல் துறை என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications