கனடாவிலிருந்து காதலர் கதறக் கதற... ஸ்கைப்பில் தற்கொலையை "லைவ்" செய்த தெலுங்கு டிவி தொகுப்பாளினி!
ஹைதராபாத்: காதல் விவகாரத்தால் மனமுடைந்த ஜெமினி மியூசிக் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ காலில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
தெலுங்குத் தொலைக்காட்சியான ஜெமினி மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நிரோஷா. செகந்திராபாத்தில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்த நிரோஷா, நேற்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

துறுதுறு பேச்சு, அழகு என தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம்வந்த நிரோஷாவின் இந்த திடீர் முடிவு தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்தது.

இதற்கு முன்பு ஒரு தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில், பத்திரிக்கையாளராக பணியாற்றிய நிரோஷா, அண்மையில் தான் ஜெமினி டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தார்.

நிரோஷாவின் காதலர் பெயர் ரித்விக் என்றும், அவர் கனடாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்தமாதம் நிரோஷாவிற்கு திருமணம் நடைபெற இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் தான் திடீரென தற்கொலை முடிவை நாடியுள்ளார் நிரோஷா. நிரோஷாவின் இந்த துயர முடிவிற்குக் காரணம் காதல் விவகாரம் தான் எனக் கூறப்பட்டது. தற்போது அதனை நிரூபிப்பதுபோல், தனது காதலருடன் ஸ்கைப் மூலம் வீடியோ காலில் பேசியவாறே, நிரோஷா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
அதோடு, கடந்த சில நாட்களாக தீவிர மன அழுத்தத்தில் இருந்துள்ளார் நிரோஷா. அதே மனநிலையில் நேற்றுமுன் தினம் இரவு தனது காதலருடன் வீடியோ கால்' மூலம் பேசி உள்ளார் நிரோஷா.

அப்போது தனது காதலரிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு, சொன்னபடி தூக்கிட்டும் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது காதலர் உடனடியாக நிரோஷாவின் பெற்றோருக்கும், அவர் தங்கியிருந்த விடுதிக்கும் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் விடுதி ஊழியர்கள் நிரோஷாவின் அறைக்கதவை தட்டியும் திறக்காததால், போலீசாரின் உதவியுடன் அறைக்கதவை உடைத்து, அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து ராம்கோபால் பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, நிரோஷாவின் செல்போன் அழைப்புகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications