பாகிஸ்தானுக்கு ஓடிப் போக சொன்ன பாஜகவின் கிரிராஜ்சிங்குக்கு முன் ஜாமீன் கிடைத்தது!
பாட்னா: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டும் என்று சொன்ன பாஜக மூத்த தலைவர் கிரிராஜ்சிங்குக்கு பாட்னா நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது.
நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை.. அவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் பீகார் முன்னாள் அமைச்சருமான கிரிராஜ்சிங் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.

கிரிராஜ்சிங் மீது அடுத்தடுத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அவரை கைது செய்யவும் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. மேலும் கிரிராஜ்சிங் பிரசராம் செய்ய தேர்தல் ஆணையமும் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் மும்முரம் காட்டினர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கிரிராஜ்சிங் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் தமக்கு முன் ஜாமீன் கோரி பாட்னா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கிரிராஜ்சிங் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications