வேலை தேடி டெல்லி சென்ற இளம்பெண் காரில் வைத்து பாலியல் பலாத்காரம்.. ஒருவர் கைது
வேலை தேடி டெல்லிக்கு சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: தெற்கு டெல்லியின் மோதி பாக் பகுதியில் வியாழக்கிழமை இரவு இளம் பெண் ஒருவர் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் வேலை தேடி டெல்லிக்கு வந்தார். மாலையில் வீடு திரும்புவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது உள்துறை அமைச்சகத்தின் 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட கார் ஒன்று அவர் அருகே வந்து நின்றது. காரை ஓட்டி வந்த நபர் இந்த இளம்பெண்ணிடம் அவரது வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அவரை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

பெண் காரில் ஏறியதும், சிறிது தூரம் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த நபர் காரை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த நபரிடம் இருந்து தப்பி ஓடிய இளம் பெண் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தஞ்சம் அடைந்தார்.
போலீசார் அந்த பெண்ணை தெற்கு பகுதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் இட்டா நகரை சேர்ந்த அவினேஸ் (வயது 28) என்பவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவம் நாட்டையே உலுக்கியது. 6 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயா உயிரிழந்தார். இந்த நிலையில் அவ்வவ்போது டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருவது பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications