பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதிக்கு ஆணுறுப்பை வெட்டித்தள்ளிய பெண்!

Subscribe to Oneindia Tamil

மாதேபுரா, பீகார்: பீகார் மாநிலம் மாதேபுரா என்ற இடத்தில் தன்னைப் பலாத்காரம் செய்து சீரழித்த மந்திரவாதியின் ஆணுறுப்பை அறுத்து வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு பெண்.

இத்தனைக்கும் அந்த மந்திரவாதி அப்பெண்ணின் உறவினர் ஆவார்.

ஜூலை 2 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் ஜூலை 30 ஆம் தேதிதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாதேபுரா போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உடல் நிலை பாதிப்பு:

அந்தப் பெண்ணின் பெயர் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஜூலை 1 ஆம் தேதி தனது உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார்.

மந்திரவாதி மாமா:

அப்போது அவரது தாயார் அருகில் இருந்த தனது அக்காள் கணவரும், மந்திர தந்திரம் தெரிந்தவருமான மகேந்திர மேத்தா என்பவரை அழைத்துள்ளார். அவரிடம் சுனிதாவை காற்றுக் கருப்பு பிடித்திருக்குமோ என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்முறை:

இதையடுத்து சுனிதாவை தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்றார் மேத்தா. அங்கு தனி அறையில் வைத்து அவர் சுனிதாவைப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதற்கு சுனிதா எதிர்ப்புத் தெரிவித்து போராடியபோதிலும் விடவில்லை.

மீண்டும் சில்மிஷம்:

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சுனிதா, இதுகுறித்து வெளியில்யாரிடமும் தெரிவிக்கவில்லை. அடுத்த நாள் சுனிதாவின் தாயார் வெளியே போயிருந்த சமயம், மீண்டும் வீட்டுக்கு வந்தார் மேத்தா.

மறுபடி அழைத்த மேத்தா:

தனது வீட்டுக்கு வருமாறு சுனிதாவைக் கூப்பிட்டுள்ளார். இதையடுத்து சுனிதாவும் சத்தம் காட்டாமல் கிளம்பிச் சென்றார். செல்லும்போது மேத்தாவுக்குத் தெரியாமல் ஒரு சின்னக் கத்தியை மறைத்து எடுத்துக் கொண்டார். செல்போனையும் எடுத்துக் கொண்டார்.

செல்போனில் பதிவு:

வீ்ட்டுக்குப் போனதும் மேத்தா, சுனிதாவிடம் பாலியல் பேச்சுக்களைப் பேசியுள்ளார். அதை சத்தம் காட்டாமல் ரகசியமாக தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார் சுனிதா.

கத்தியால் வெட்டிய சுனிதா:

பின்னர் மேத்தா, சுனிதாவிடம் மீண்டும் தவறாக நடக்க முயன்றார். அப்போது அதிரடியாக தான் கொண்டு போயிருந்த கத்தியை எடுத்து மேத்தாவின் ஆணுறுப்பை வெட்டி விட்டார். இதைக் கண்டு அலறினார் மேத்தா. ஆனாலும் விடாமல் முழுமையாக அதைச் செய்து விட்டு அங்கிருந்து எழுந்து ஓடி விட்டார் சுனிதா.

போலீசில் சரண்:

பின்னர் நேராக போலீஸில் போய் நடந்ததைக் கூறினார். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று சுனிதாவின் பெற்றோர் போலீஸில் வாதாடினர். ஆனால் சுனிதா நேர்மையாக நடந்து கொண்டு நடந்ததைக் கூறி செல்போனில் பதிவு செய்த பேச்சையும் ஒப்படைத்தார்.

மந்திரவாதி மாயம்:

முன்னதாக ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி மேத்தாவைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சுனிதா உறுதியாக இருந்து விட்டதால் போலீஸ் வரை பிரச்சினை போய் விட்டது. தற்போது அந்த மந்திரவாதி மாயமாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+