தெலுங்கானாவில் புத்தக பை சுமை தாங்காமல் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி
தெலுங்கானாவின் கரிமாபாத்தில் உள்ள பள்ளியில் மாடியில் இருந்து சரிந்து விழுந்து மாணவி பலியானார். பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
வாரங்கல்: தெலுங்கானா மாநிலம் கரிமாபாத்தில் உள்ள பள்ளியில் நேற்று காலை மாணவி ஒருவர் புத்தகப்பை சுமை தாங்காமல் மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
வாரங்கலைச் சேர்ந்த 14 வயதான ஸ்ரீவர்ஷிதா என்கிற மாணவி கரிமாபாத்தில் உள்ள கவுடில்யா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை அடுத்து நேற்று வழக்கம் போல பள்ளி திறக்கப்பட்டது.

அப்போது காலை 8.45 மணியளவில் பள்ளிக்கு வந்த மாணவி ஸ்ரீவர்ஷிதா மாடிப்படியில் சென்று கொண்டிருந்தார். மூன்றாவது மாடியை அடைந்தபோது எதிர்பாராத விதமான அவர் மாட்டியிருந்த புத்தகப்பை சரிந்ததில், அந்த மாணவி தவறி விழுந்தார்.
அவருக்கு முன் தலையில் பலத்த அடிபட்டு, மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், மருத்துவமனையில் அந்த மாணவிக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுவிட்டு அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.இந்தத் தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் மரணம் ஏற்பட்டதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் ஸ்ரீதர் கூறுகையில், 'நாங்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், இரத்த அழுத்த குறைவு காரணமாகவும், நீர்ச்சத்து குறைவு காரணமாகவும் தான் அந்த மாணவி உயிரிழந்தார்' என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications