For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டிறைச்சிக்கு அனுமதி அளித்துதான் மனோகர் பாரிக்கர் இறந்தார்.. சாத்வி பிரக்யா அடுத்த சர்ச்சை!

பசுக்களை மதிக்காமல் மாட்டிறைச்சிக்கு அனுமதி அளித்ததால்தான் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்தார் என்று பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மனோகர் பாரிக்கர் இறப்பிற்கு புதிய காரணம் சொன்ன பாஜக வேட்பாளர்- வீடியோ

    போபால்: பசுக்களை மதிக்காமல் மாட்டிறைச்சிக்கு அனுமதி அளித்ததால்தான் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்தார் என்று பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.

    இந்திய அரசியலில் புதிய சர்ச்சைகளின் புதல்வியாக பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குர் மாறியுள்ளார். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.

    இந்த மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த சாத்வி பிரக்யா தாக்குர். பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது பாஜக சார்பாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போட்டியிடுகிறார். இவர் தொடர்ந்து சர்ச்சையாக நிறைய பேசி வருகிறார்.

    வாரணாசி தேர்தலில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய தமிழக விவசாயிகள்..போலீஸ் மிரட்டுவதாக புகார் வாரணாசி தேர்தலில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய தமிழக விவசாயிகள்..போலீஸ் மிரட்டுவதாக புகார்

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிலையில் போபாலில் நேற்று சாத்வி பிரச்சாரத்தின் போது, மாட்டிறைச்சி உண்பது மிக மிக தவறானது. அது இந்து மதத்திற்கு எதிரானது. மாட்டிறைச்சி உண்பவர்கள் இந்துக்கள் கிடையாது. அவர்கள் எல்லோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    மிக மோசம்

    மிக மோசம்

    பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு முழுக்க மாட்டிறைச்சி தடை செய்யப்படும். கோவாவில் மாட்டிறைச்சி தடை செய்யப்படும். வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்படும். தென்னிந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மாட்டிறைச்சி உடனே தடை செய்யப்படும்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    கோவாவில் பாஜக ஆட்சியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டதை ஏற்க முடியாது. மாட்டிறைச்சி விற்பனை ஆனதால்தான் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்தார். அவர் பசுவை மதிக்கவில்லை. அதனால் தண்டனை பெற்றார்.

    கேன்சர்

    கேன்சர்

    ஆனால் நான் பசுவை மதித்தேன். நான் கோமியம் குடித்தேன். அதனால் எனக்கு நன்மைகள் ஏற்பட்டது. அதனால்தான் என்னுடைய மார்பக புற்றுநோய் குணம் ஆனது. நான் தினமும் கோமியம் குடித்தேன் என்று சாத்வி குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவருக்கு மார்பக புற்றுநோயே ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் சில நாட்களுக்கு முன் நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Goa CM Parrikar died of cancer because he allowed the consumption of beef in Goa says Sadhvi in Her Campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X