நிர்வாண பார்ட்டின்னு சொன்னதுமே.. பாரீன்ல இருந்தெல்லாம் வந்த போன் கால்.. அதிர்ச்சியான இளைஞர்!
Recommended Video
டெல்லி: "நிர்வாண பார்ட்டி"ன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டினதுமே.. ஃபாரீன்ல இருந்தெல்லாம் போன் வர ஆரம்பிச்சிடுச்சு.. அதனால என் போனை ஸ்விட்ச் ஆப் செய்துட்டேன்" என்று கைதான இளைஞர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
"என்ஜாய்" என்ற பெயரில் கோவாவில் நடக்கும் கூத்துகள் எக்கச்சக்கம். அதனால்தான் எந்நேரமும் இங்கு கூட்டம் நிறைந்து வழிந்து கொண்டே இருக்கும். இருக்கிற கூத்து பத்தாது என்று ஒரு போஸ்டரை இங்கு வந்து போன வாரம் யாரோ ஒட்டி இருந்தனர்.
கோவாவின் வடக்கு பகுதியில் நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாகவும், 10-15 வெளிநாட்டு பெண்களுடன் 10-க்கும் மேற்பட்ட இந்திய பெண்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த பார்ட்டி எங்கே நடக்க போகிறது, எப்போது நடக்க போகிறது என்ற விவரமெல்லாம் அதில் இல்லை.

போஸ்டர்
"நிர்வாண பார்ட்டி" என்றதுமே இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் மிக வேகமாக வைரலாக தொடங்கியது. இந்த பரபரப்பு போஸ்டர் விவகாரம், கோவா மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரதிமா வரை சென்றுவிட்டது. ''இந்த விவகாரத்தில், முதல்வர் உடனடியாக தலையிட்டு, கடும் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்,'' என பிரதிமா வேண்டுகோள் விடுத்தார்.

முதலமைச்சர்
இதையடுத்து, மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகரும் "இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவு விடுத்தனர். இதன்பிறகு போலீசார் இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கி, போஸ்டர் வேலையை செய்தது யார் என்ற விசாரணையை கையில் எடுத்தனர். அதன்படியே போஸ்டர் அடித்து ஒட்டிய இளைஞரை கைது செய்துள்ளனர்.

ஐடியா
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சொன்னதாவது: ''படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டேன். கையில பணம் இல்லை.. என்ன செய்றதுன்னு தெரியல. அதனால பணம் சம்பாதிக்க ஐடியா பண்ணினேன். அப்பதான் இந்த நிர்வாண பார்ட்டி யோசனை வந்தது.

அட்வான்ஸ்
இன்டர்நெட்டில் இருந்து சில போட்டோக்களை எடுத்து இந்த போஸ்டரை ரெடி பண்ணேன். இதற்கு அட்வான்ஸ் வாங்கி கொள்ளலாம் என்றும் முடிவு செய்தேன். அப்படி அட்வான்ஸ் பணம் கிடைத்தால், அதை எடுத்து கொண்டு ஓடிவிடலாம் என்பதுதான் என் பிளான்.

கைது
ஆனால் நானே எதிர்பாராத வகையில், ஏகப்பட்ட போன்கள் எனக்கு வர ஆரம்பித்தன. ஃபாரீன்ல இருந்து கூட போன் வந்தது. அதனால நான் பயந்துட்டேன். போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துட்டேன். இது பற்றி போலீஸ் விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு தெரிஞ்சதுமே நான் இன்னும் பயந்துட்டேன். கொஞ்ச நாள் ஆற போடலாம்னு விட்டுட்டு, இப்பதான் போனை ஆன் பண்ணேன். ஆனால் போலீசார் அதை வைத்து என்னை பிடித்து விட்டார்கள்" என்றார். இதையடுத்து, தொடர்ந்து இளைஞனிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications