நள்ளிரவில் பேரதிர்ச்சி.. கோவா நைட் கிளப்பில் மிக மோசமான தீ விபத்து! 25 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
கோவா: வட கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக நைட் கிளப் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பார்ட்டி நகரம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது கோவா தான்.. உலகெங்கும் இருந்து கூட பல்வேறு சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வருகை தருவது வழக்கம். அந்தளவுக்குத் தரமான ஒரு பார்ட்டி லைப்பை கொண்ட இடமாகக் கோவா இருந்து வருகிறது. இதனால் அங்கு விடிய விடிய, குறிப்பாக வார இறுதி நாட்களில், பார்டி இருக்கும்.

தீ விபத்து
அப்படி அங்கு பார்டி நடந்த ஒரு நைட் கிளப்பில் நேற்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு ஆர்போரா என்ற பகுதியில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' (Birch by Romeo Lane) என்ற நைட் கிளப்பில் நேற்று நள்ளிரவு பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர். கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன நடந்தது
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த நைட் கிளப்பில் வேலை செய்து வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது தவிர நான்கு சுற்றுலாப் பயணிகளும் இதில் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கோவா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சமையலறைப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட ஒரு கேஸ் சிலிண்டர் வெடிப்பே தீ விபத்துக்குக் காரணம் என முதலில் கூறப்பட்டது. இருப்பினும், விபத்திற்கான காரணம் இதுவரை துல்லியமாகத் தெரியவில்லை.
இந்த வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், சில வினாடிகளிலேயே தீ மொத்தக் கட்டிடத்தையும் சூழ்ந்து கொண்டன. இதனால் உள்ளே இருந்தவர்கள் தப்பிக்க மிகக் குறைந்த நேரமே கிடைத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். நைட் கிளப் மூடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோதே இந்த விபத்து நடந்துள்ளது.
கோவா முதல்வர்
இது தொடர்பாகக் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டரில், "ஆர்ப்போராவில் நடந்த மோசமான தீ விபத்து குறித்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக இருக்கிறது. அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
முக்கிய காரணம்
தீ விபத்து காரணமாகப் புகை கிளம்பிய நிலையில், அதில் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவே பிரதானக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நைட் கிளப் உரிமையாளர் மற்றும் மேனேஜர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தோரில் பெரும்பாலானோரின் உடல் அடையாளம் காணப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த விபத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications