திருமணத்தில் துப்பாக்கியால் சுட்டு பெண் சாமியார் கொண்டாட்டம்- மணமகனின் அத்தை பலி!
ஹரியானாவில் திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட பெண் சாமியார் துப்பாக்கியால் சுட்டு ஆட்டம்போட்டத்தில் மணமகனின் அத்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
சண்டிகர் : ஹரியானாவின் கர்னல் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பெண் சாமியார் ஒருவர்த னது மகிழ்ச்சியை வெளிப்படுத்த துப்பாக்கியால் சுட்டதில் மணமகனின் அத்தை பரிதாபமாக பலியானார்.
கர்னலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அப்பகுதியை சேர்ந்த சாத்வி தேவா தாக்கூர் என்ற பெண் சாமியார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். துப்பாக்கி பிரியையான இந்த பெண் சாமியார் தனது ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் திருமண மண்டபத்துக்கு வந்தார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திருமண வீட்டார் நடனமாடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்டு உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்ற பெண் சாமியார் தனது ஆதரவாளர்களுடன் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஆட்டம் போட்டார். ஆனால் துப்பாக்கி குண்டுகள் அங்கு நடனமாடியவர்கள் மீது பாய்ந்ததில் மணமகனின் அத்தை அங்கேயே உயிரிழந்தார். படுகாயாயமடைந்த 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடந்ததை உணர்ந்த பெண் சாமியார் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆதரவாளர்களுடன் தப்பி ஓடிவிட்டார். பெண் சாமியார் மீது கொலை மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
#WATCH: Celebratory firing by Sadhvi Deva Thakur and her security guards in a wedding in Haryana's Karnal. 1 dead and 3 injured pic.twitter.com/0UNxUvxzCm
— ANI (@ANI_news) November 15, 2016
காவி உடையணிந்துள்ள இந்த சாமியார் தங்கத்தால் உருவாக்கப்பட்ட டர்பனை தலையில் அணிந்துள்ளார். நவீன சாமியார் என கூறிக்கொள்ளும் இவர் எங்கே சென்றாலும் துப்பாக்கியை கையில் கொண்டு செல்வது வழக்கமாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications