தெலுங்கானா: ஆந்திர அரசியல் கட்சிகளுடன் 12, 13-ல் அமைச்சர்கள் குழு ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

தெலுங்கானா தனி மாநில விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே., தனி மாநிலம் தொடர்பாக ஆந்திரத்தில் 8 அரசியல் கட்சிகளுடன் தனித் தனியே 12, 13 ஆகிய தேதிகளில் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம்.
அதைத் தொடர்ந்து, ஆந்திராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்களுடன் 18-ந் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதனிடையே அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், தெலுங்கானா தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி ஷிண்டேவை மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications