பொதுமக்களுக்கு ஒரு ‘பிரைட்’ நியூஸ்... எல்.இ.டி. விளக்குகளை ரூ. 44க்கு விற்க மத்திய அரசு திட்டம்
டெல்லி: பொதுமக்களுக்கு ரூ. 44 விலையில் எல்.இ.டி. விளக்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எல்.இ.டி. விளக்குகள் தற்போது சந்தையில் ரூ. 300 வரை விற்பனை செய்யப் படுகிறது. இவற்றின் மூலம் மின்சாரம் சேமிக்க முடியும் என்ற போதும், விலை அதிகமாக இருப்பதால் மக்கள் வாங்கத் தயங்குகின்றனர்.
எனவே, மக்களின் நலன் மற்றும் மின்சாரத்தை சேமிப்பதைக் கருத்தில் கொண்டு எல்.இ.டி விளக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து ரூ. 44க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:-

மொத்தமாக கொள்முதல்...
சந்தையில் தற்போது எல்.இ.டி. விளக்குகள் சராசரியாக ரூ. 300 விலையில் விற்கப்படுகிறது. வீட்டு மின் விளக்கு திட்டத்தில் (டி.இ.எல்.பி.) டெண்டர் மூலம் மொத்தமாக எல்.இ.டி. விளக்குகளைக் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு ரூ.44 விலையில் வழங்கத் திட்டமிட்டு வருகிறோம்.

மின் சேமிப்பு...
எல்.இ.டி. விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும்.

நாடு முழுவதும்...
தற்போது நாடு முழுவதும் பயன்படுத்தப் படும் 77 கோடி மின் விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட்டால் ஆண்டுக்கு 2500 கோடி கிலோ வாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜனவரியில் தொடங்கப்பட்ட திட்டம்...
இந்த தேசிய திட்டமானது கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை 1.35 கோடி எல்.இ.டி. விளக்குகள் விநியோகிக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications