ஒடிசாவில் மீண்டும் விபத்து.. தனியாருக்கு சொந்தமான சரக்கு ரயில் தடம் புரண்டது..யாருக்கும் காயம் இல்லை
புவனேஸ்வர்: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தின் ரணமே ஆறாத நிலையில், மீண்டும் ஒடிசாவில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கியது. ஒடிசாவின் பாலசோர் அருகே வந்த போது பெங்களூர்- கொல்கத்தா சென்ற ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிர்சேதம் பெரும் அளவில் இருந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர் இந்த விபத்தில் சிக்கியவர்கள் பலரும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மீட்பு பணிகள் முடிந்து தண்டவாள மறுசீரமைப்பு பணியும் முடிந்துள்ளது. விபத்துக்குள்ளான பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியிருக்கிறது.
இதனிடையே, அதி நவீன தொழில்நுட்பம் வளர்ந்து பெருகிவிட்ட இன்றைய காலத்தில் ஒடிசாவில் நடைபெற்ற இவ்வளவு பெரிய விபத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனித தவறு காரணமா? பல்வேறு கேள்விகளும் எழுந்தன. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் எலக்ட்ரானிக் இண்டெர்லாக்கிங்க் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் விபத்து நடைபெற்று இருப்பதாகவும் அறிக்கை சமர்பித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியிருந்தார்.
ஒடிசா ரயில் விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் கூட ரயில்வே அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்தார்.
ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்பதற்கான விடையே இன்னும் கிடைக்காத நிலையில், இன்று மீண்டும் ஒடிசாவில் ஒரு சரக்கு ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. கோரமண்டல் விபத்துக்குள்ளான பாலாசோர் பகுதியில் இருந்து 500 கி.மீட்டர் தொலைவில் உள்ள பர்ஹார் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
சுண்ணாம்பு சுரங்கத்தில் இருந்து சிமெண்ட் தொழிற்சாலைக்கு இயக்கப்பட்ட தனியார் சரக்கு ரயில் இது எனவும் சொல்லப்படுகிறது. ரயில் பாதை மற்றும் சரக்கு பெட்டிகள் லோகோமேட்டிவ் என அனைத்து தனியாருக்கு பாத்தியப்பட்டது எனவும், இந்திய ரயில்வேக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை எனவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த சரக்கு ரயில் தடம் புரண்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications