டிரைவர் இல்லாமல் 1 கி.மீ. தூரத்துக்கு தானாக ஓடிய சரக்கு ரயில்: 4 பேர் சஸ்பெண்ட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அஜாக்கிரதையாக இருந்த 4 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், தவ்சா மாவட்டத்தில் உள்ள பாங்க்ரி என்ற ரயில் நிலையத்தில் நேற்று ஒரு சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சரக்கு ரயில் திடீரென ஓட்டுநர் இல்லாமலேயே கிளம்பி ரயில் நிலையத்தைத் தாண்டி 1 கிமீ தூரம் வரை சென்றது.

ஊழியர்களின் கவனக்குறைவே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. எனவே இந்த சம்பவத்திற்கு காரணமதன ரயில் நிலைய உதவி ஸ்டேஷன் மாஸ்டர் கே.பி.மீனா, ஓட்டுனர் பிரிஜ்பிஹாரி, கார்டு ரமேஷ் சந்த், உதவி ஓட்டுனர் மான்சிங் ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
மேலும் சரக்கு ரயில் தானாக ஓடியது தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணைக்கும் ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications