மாரடைப்பும், கல்லீரல் சேதமடைந்து 2 லிட்டர் ரத்தம் வீணானதும் முண்டே மரணத்துக்குக் காரணம்!
டெல்லி: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கியதும் அவரது கல்லீரல் சேதம் அடைந்து 2 லிட்டர் அளவுக்கு ரத்தம் போயுள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு செல்கையில் விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் விபத்து குறித்த தகவல்களை பார்ப்போம்.

அத்வானி
முண்டே சென்ற கார் மோதி பாக் அருகே டாடா இன்டிகா காருடன் மோதியது. இந்த விபத்து பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வீடு அருகே நடந்தது.

பின் சீட்
கார்கள் மோதியபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முண்டே இருக்கையின் மறுபுறம் வந்து விழுந்துள்ளார்.

காயம்
விபத்தில் முண்டேவின் மூக்கில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனையை அடையும் முன்பு அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.

மாரடைப்பு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முண்டே மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கல்லீரல்
விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவரது கல்லீரல் சேதமடைந்து 2 லிட்டர் அளவுக்கு ரத்தம் போயுள்ளதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications