மிசோரம் சட்டசபை தேர்தல்: நோட்டாவுக்காக காத்திருக்கும் கூர்க்கா வாக்காளர்கள்!
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் தங்களது கோரிக்கையை மாநில அரசுகள் நிறைவேற்றாததைக் கண்டித்து தேர்தலின் போது நோட்டாவை (NOTA) பயன்படுத்த கூர்க்கா வாக்காளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பது அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமை. ஆகையால் தேர்தலின் போது வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே எவருக்கும் வாக்களிக்க உரிமை இல்லை என்பதற்கான பட்டனை பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை (நோட்டா) என்ற பொத்தானை பொருத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. தற்போது நடைபெற்று வரும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் நாட்டில் முதல் முறையாக நோட்டா பட்டன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மிசோரமில் 25-ந் தேதி தேர்தல்
தற்போது தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மிசோரமும் ஒன்று. இம்மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மிசோரம் சட்டசபைக்கு வரும் 25--ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

25 ஆயிரம் கூர்க்காக்கள்
இம்மாநிலத்தில் மொத்தம் 25 ஆயிரம் கூர்க்கா மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 9,771 பேர் வாக்களார்கள்.

23 தொகுதிகளில் கணிசமான வாக்காளர்கள்
மாநிலத்தின் 40 சட்டசபை தொகுதிகளில் 23-ல் கணிசமான அளவு இம்மக்கள் வாழ்கின்றனர்.

எம்பிசிக்கு மாற்ற கோரிக்கை
இவர்கள் தங்களை ஓபிசி பட்டியலில் இருந்து எம்.பி.சி பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று நீண்டகாலம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தங்களது கோரிக்கையை எந்த ஒரு மாநில அரசும் நிறைவேற்றவில்லை என்பது கூர்க்காக்களின் ஆதங்கம்.

நோட்டாதான் வழி..
இதனால் இம்முறை வாக்குப் பதிவின் போது எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற 'நோட்டா' முறையை பயன்படுத்த கூர்க்கா இன மக்கள் தீர்மானித்துள்ளனர். அனைத்து கூர்க்கா வாக்காளர்களும் நோட்டா பட்டனை பயன்படுத்துவது குறித்து விளக்க வகுப்புகளும் கூட நடத்தப்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் எதிரொலிக்குமே..
அப்படி கூர்க்கா இன வாக்காளர்கள் 9,771 பேரும் ஒட்டுமொத்தமாக நோட்டாவை பயன்படுத்தினால் பரபரப்பு ஏற்படும். இதர மாநிலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வரும் மக்களிடையே அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications