தலித், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் உயர்ந்துள்ளது.. ஒப்புக் கொண்ட மத்திய அரசு
எஸ்சி- எஸ்டி பிரிவினர் பாதுகாப்புக்கான வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து பாரத் பந்த் நடக்கிறது. இந்த நிலையில், இந்த சட்டத்தின்கீழ், கடந்த 5 ஆண்டுகளில் அதிக வழக்க
Recommended Video

டெல்லி: வன்கொடுமை சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து, வடமாநிலங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், 2014 மற்றும் 2016ல் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதை மத்திய அரசு பார்லிமென்டில் ஒப்புக் கொண்டுள்ளது.
எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கு எதிரான பாகுபாட்டை தடுப்பதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி நேர்மையான அதிகாரிகள் கைது செய்யப்படுவதால் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அரசு அதிகாரிகளை கைது செய்வதற்கு தடை விதித்து, மார்ச் 20ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போராட்டங்களின்போது வன்முறை வெடித்து, 9 பேர் உயிரிழந்தனர்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், மத்தியில் பாஜ அரசு அமைந்தபிறகு, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதை, பார்லிமென்டில் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இன்று லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் கூறியதாவது:
மத்தியில் பாஜ அரசு பதவியேற்ற, 2014ல் எஸ்சி பிரிவினருக்கு எதிராக வன்முறை நடந்ததாக, 40,300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது, 2015ல் 38,564 ஆகக் குறைந்தது. ஆனால் 2016ல் 40,774ஆக உயர்ந்தது. அதேபோல் எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்முறை தொடர்பாக, 2014ல் 6,788 வழக்குகளும், 2015ல் 6,275 ஆகக் குறைந்து 2016ல் அது, 6,565ஆக உயர்ந்தது.
எஸ்சி பிரிவினருக்கு எதிராக 2012ல் 33,593 மற்றும் 2013ல் 39,346 வழக்குகள் பதிவாயின. எஸ்டி பிரிவினருக்கு எதிராக இந்த ஆண்டுகளில் முறையே 5,920 மறறும் 6788 வழக்குகள் பதிவாயின.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் இருந்து, இந்த வன்கொடுமை சட்டத்தில் விலக்கு அளித்தால், அது மேலும் தவறாகப பயன்படுத்த வாய்ப்புள்ளதையே காட்டுகிறது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications