சிகரெட் பயன்பாட்டை குறைக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் வருகிறது புதிய சட்டம்!
டெல்லி: சிகரெட் பயன்பாடு மற்றும் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவரும் வகையிலான சட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
சிகரெட், புகையிலையால் புற்றுநோய் ஏற்படுவதால் அதன்பயன்பாட்டை குறைக்க இயன்ற முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி புகையிலை எதிர்ப்பு சட்ட மசோதா ஒன்று தயாராகி வருகிறது. விரைவில் இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூற்பபுடகிறது.

சமூக சேவை
சிகரெட் நிறுவநங்கள் டிவி, பத்திரிகை மூலமாக விளம்பரம் செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே அவை, கார்பொரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்ற பெயரில், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்து பெயரை ஈட்டுகின்றன. பொது இடங்களில் குடிநீர் கேன்கள் அமைப்பது, மணிக்கூண்டு கட்டுவது, ஏழை எளிய மக்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்குவது போன்றவை இந்த சோசியல் நடவடிக்கையின்கீழ் வரும். முன்னணி புகையிலை நிறுவனம் ஐடிசி கடந்த ஆண்டில் மட்டும் சோசியல் சேவைக்காக ரூ.80 கோடியை செலவிட்டுள்ளது.

சமூக சேவை கூடாது
சிகரெட் நிறுவனங்களின் கழுத்தை இறுக்கிபிடிக்க முடிவு செய்து உருவாக்கப்படும் இந்த புதிய சட்டத்தில், அதுபோன்ற சோசியல் நடவடிக்கைகளுக்கும் கடும் கட்டுப்பாடு வர உள்ளது. செல்போன், இணையதளத்திலும் சிகரெட் விளம்பரம் தடை செய்யப்பட உள்ளது.

பங்குகள் சரிவு
இந்த சட்டம் குறித்து தகவல் வெளியானதுமே, ஐடிசி உள்ளிட்ட புகையிலை நிறுவன பங்குகள் சரிவடைய தொடங்கியுள்ளன. அந்த அளவுக்கு கட்டுப்பாட்டின் வீரியம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏர்போர்ட்டில் இடமில்லை
புதிய சட்டத்தின்படி உணவகங்கள், ஏர்போர்ட்டுகளில் புகை பிடிக்க தனி இடங்களை உருவாக்கி தரக்கூடாது என்றும் கூறப்பட உள்ளதாம். அதே நேரம் சர்வதேச விமான நிலையங்களில் விமானங்களுக்காக நெடுநேரம் காத்திருக்க வேண்டி வரும் என்பதால் அங்கு மட்டும் இந்த கட்டுப்பாடு இருக்கப்போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வயது உயர்வு
சமீபத்தில் ராஜ்யசபாவில் மத்திய அரசு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், லூஸில் சிகரெட் விற்பனை செய்வதை தடுக்கப்போவதாகவும், சிகரெட் வாங்குவோரின் வயது வரம்பை உயர்த்த போவதாகவும் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications