டெல்லியில் ஆட்சியமைக்க நெருங்கும் கெடு... மௌனம் காக்கும் கட்சிகள்: ஜனாதிபதி ஆட்சி அமல்?
டெல்லி: டெல்லியில் புதிய அரசு அமைய வரும் புதன்கிழமை வரை மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் கட்சிகள் தொடர்ந்து மௌனம் காப்பதால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆட்சி அமைக்க 36 எம்எல்ஏக்கள் தேவை. பாஜக கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும், சுயேட்சை 2 இடங்களையும் பிடித்தனர்.
32 இடங்களை பிடித்த பாஜக ஆட்சி அமைக்க மேலும் 4 இடங்கள் தேவை. சுயேட்சைகள் தனது ஆதரவைத் தெரிவித்தாலும் கூட அது பாஜக ஆட்சியில் அமர போதுமானதாக இருக்காது. எனவே, அக்கட்சி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து, அடுத்த இடத்தில் 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு துணை நிலை ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தது.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ ஆட்சி அமைக்க 18 நிபந்தனைகளை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு விதித்தது. மேலும், தங்களுக்கு 10 நாள் அவகாசமும் கேட்டது. ஆனால், அதற்குப் பதிலளிக்காமல் தொடர்ந்து காங்கிரஸும், பாஜகவும் அமைதி காத்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை என்றும், ஆகவே டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து துணை நிலை ஆளுநர் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications