அரசு மதுக்கடைகளில் குஷியில் குடிமகன்கள்.. பாட்டிலுக்கு 1 பீர் இலவசம்.. உ.பி. டூ டெல்லி வரை "வாசனை"

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: அரசின் புதிய மதுபான கொள்கை விரைவில் அமலாக உள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே பரபரப்பு சூழ்ந்துள்ளது.. மதுக்கடைகள் அனைத்துமே நிறைந்து வழிய, அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. அந்தவகையில், உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லிவரை "மதுபான நெடி" வீசிக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது உத்தரபிரதேசத்தில்?

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதம் வரை சிறையில் இருந்ததை தலைநகர மக்களால் மறக்க முடியாது.

uttar pradesh Government liquor shops Delhi

புதிய மனுபான கொள்கை

இந்த புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததால் எழுந்த புகாரில்தான், அதே ஆம் ஆம் கட்சியின் 2 மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டது. பிறகு, டெல்லி அரசு இந்த கொள்கையை ரத்து செய்தாலும், உத்தரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு, புதிய கலால் கொள்கை 2024-25க்கு கடந்த 2023-ல் ஒப்புதல் அளித்திருந்தது.
அதன்படி, உபியின் ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ஸ்டேஷன்களில் இனி மதுபானங்களை விற்பனை செய்யலாம் உட்பட மதுபான சில்லறை கடைகள் திறப்பது குறித்தும் வெளியிட்டிருந்தது.

கொந்தளித்த அகிலேஷ் யாதவ்

அரசின் இந்த அறிவிப்புக்கு அகிலேஷ் யாதவ் அப்போதே கண்டனம் தெரிவித்திருந்தார்.. "உ.பி.யை 1 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற இதுதானா? பொது இடங்களில் மது குடிப்பது நல்லது என்று பாஜகவினர் நினைத்தால், அதை அவர்களது அலுவலகங்களில் இருந்து விற்கவேண்டியதுதானே? என்று காட்டமாக கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், உத்தர பிரதேச அரசின் புதிய மதுபான கொள்கை வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலாக உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள மதுக் கடைகளில் இருக்கும் சரக்குகளை 31 ம் தேதிக்குள் விற்கும் முயற்சியில் கடை உரிமையாளர்கள் இறங்கி உள்ளனர்.

இதுதான் விதிமுறைகள்

விதிகளின்படி, மதுபான ஒப்பந்ததாரர்கள் தங்கள் முழு இருப்பையும் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும், இல்லாவிட்டால் மீதமுள்ள மதுபானங்கள் அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்படும்.. மேலும், அதன் விற்பனையிலும் தடை செய்யப்படும். அதனால்தான், மதுபான விற்பனையாளர்கள் ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ஆஃபரை அறிவித்திருக்கிறார்கள். இதனால் மதுப்பிரியர்கள் உச்சக்கட்ட குஷியில் உள்ளனர்..

"ஒரு மதுபாட்டில் வாங்கினால், ஒரு பீர் பாட்டில் இலவசம்" என்ற அறிவிப்புக்கு மதுப்பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.. இதனால், கடந்த சில நாட்களாகவே மதுக்கடைகளுக்கு மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கிறார்கள்.. காலையிலேயே ஒயின் ஷாப்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.. போலீசார் குவிக்கப்பட்டு அலைமோதும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது..

டெல்லி வரை போன வீடியோ

நொய்டாவில் ஒரு மதுக்கடையில் கூட்டம் நிறைந்து வழியும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இந்த விவகாரம் தற்போது மீண்டும் உபி பாஜக அரசு மீதான விமர்சனத்தை அதிகப்படுத்தி வருகிறது.... இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவருமான அதிஷி, "நீங்கள் ஒரு பாட்டில் இலவச மதுபானத்தை வழங்குகிறீர்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போது பாஜகவினர் வருவார்கள் என நம்புகிறேன். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+