இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வாக்குரிமை பறிக்கப்படும்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை
பீகார்: இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறு தொழில் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் கிரிராஜ் சிங். இவர் ஏற்கனவே, பிரதமர் மோடியை பிடிக்காதவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்லலாம் என தெரிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியவர்.

இந்நிலையில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கிறது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் கூட, இதற்காக கடுமையான சட்டங்கள் உள்ளன. இந்தியாவிலும், இரு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களின் வாக்குரிமையை பறிக்க, சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமானால், ஆந்திர மக்கள் அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் கூறியுள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications