மேடையில் சரஸ்வதி போட்டோ இல்லையாம்.. பாஜக அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! சிக்கலில் அரசு ஆசிரியை

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசு தினவிழா மேடையில் கடவுள் சரஸ்வதி தேவியின் படத்தை வைக்க மறுத்த அரசு பள்ளி ஆசிரியை சிக்கலில் சிக்கி உள்ளார். இந்து மத உணர்வுகளை அவர் புண்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் பாஜகவின் கல்வித்துறை அமைச்சர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. ராஜஸ்தான் முதல்வராக பஜன் லால் சர்மா உள்ளார். இவரது அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக மதன் திலாவர் செயல்பட்டு வருகிறார்.

Government school teacher suspended for refusing to place goddes Saraswati picture on Republic day function

இந்நிலையில் தான் கடந்த மாதம் அனைத்து அரசு பள்ளிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பரான் மாவட்டம் கிஷான்கஞ்ச் அருகே உள்ள லக்டை கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியிலும் குடியரசு தின விழா நடந்தது.

இந்த குடியரசு தினவிழாவின்போது மேடையில் கடவுள் சரஸ்வதியின் போட்டோவை வைக்க ஆசிரியை ஹேம்லதா பைர்வா மறுத்துள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அவர் பள்ளிக்கு சரஸ்வதி என்ன செய்தார்? எனும் வகையில் கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து இந்து மத உணர்வை புண்படுத்திவிட்டதாக ஆசிரியை ஹேம்லதா பைர்வாவுக்கு எதிராக புகார்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து பரான் மாவட்ட தொடக்க பள்ளி கல்வித்துறை அதிகாரி பியூஸ் குமார் சர்மா விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்பாது அவர் இந்து மத உணர்வை புண்படுத்தியது தெரியவந்தது. இதற்கிடையே இந்த விவகாரம் கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர் வரை சென்றது. அவர் ஆசிரியர் ஹேம்லதா பைர்வாவை சஸ்பெண்ட் செய்ய உத்தவிட்டார்.

அதன்படி ஆசிரியை ஹேம்லதா பைர்வா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பரன் மாவட்டம் கிஷான்கஞ்ச் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மதன் திலாவர் பங்கேற்றார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிலர் தங்களுக்கு தகுதிக்க மீறி செயல்பட்டு வருகிறார் இன்னும் கூட வேலை செய்யும் பாணியை மாற்றம் செய்யவில்லை.

பள்ளிக்கு சரஸ்வதி தேவி என்ன பங்களிப்பு செய்தார்? என கேட்கிறார்கள். இந்த பகுதியில் யார் அப்படி கேள்வி எழுப்பினாலும் நான் உடனடியாக அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்'' என ஆசிரியை ஹேம்லதா பைர்வா சம்பவத்தை நினைக்கூறி பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+