சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடாமல் 'ஜகா' வாங்கிய மத்திய அரசு... சரிபார்க்க குழு அமைத்தது!
டெல்லி: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த சாதிவாரி கணக்கு விவரங்களை சரி பார்க்க ஒரு குழு அமைப்பதாக கூறியுள்ளார் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி. இதனால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தை மத்திய அரசு உடனே வெளியிடாது என்பது உறுதியாகி உள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விவரங்களை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. மக்களின் சமூக பொருளாதார விவரங்களை வெளியிட்ட அரசு, சாதி வாரியான மக்கள் தொகை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.

இதை வெளியிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வற்புறுத்தி உள்ளன. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டம் முடிந்ததும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதி வாரியான கணக்கெடுப்பு உள்ளிட்ட விவரங்கள் மாநில அரசுகளின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் பெரும்பாலான மாநில அரசுகள் அதுபற்றிய தங்கள் பதிலை இன்னும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை.
சமூக, பொருளாதார, சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விவரங்களை சரிபார்க்க நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. மாநில அரசுகள் அனுப்பும் பதிலை இந்த குழு பரிசீலிக்கும்.
அனைத்து விவரங்களும் பரிசீலிக்கப்பட்டு, பணிகள் முடிந்த பின் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை உரிய நேரத்தில் மத்திய அரசு வெளியிடும்.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications