ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இப்படி வேலை பார்க்க வேண்டும்... சேவை விதிகள் அதிரடி மாற்றம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது பணிக்காலத்தின்போது நேர்மையாகவும், உயரிய நெறிகளுடனும், அரசியல் நடுநிலையுடனும் செயல்படும் வகையில் மத்திய அரசு பல சேவை விதிகளை மாற்றியமைத்துள்ளது.
மக்களுக்கு குறிப்பாக நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில் இவர்கள் பணியாற்ற வேண்டும். பொதுமக்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும். முடிவுகளை பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சுதந்திரமாக எடுக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறைகள் கூறுகின்றன.
இதுதொடர்பாக அகில இந்திய சேவை (நடத்தை) திருத்த விதிகள் 2014-ஐ, மத்திய அரசின் பெர்சனல் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.
- அதில் உள்ள விதிமுறைகளை அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் இந்திய வனப் பணி அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பிரச்சினைகள், மோதல்களின்போது பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டே அதிகாரிகள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் விதிமுறை கூறுகிறது.
- யாருடைய அல்லது எந்த நிறுவனத்தினுடைய பண ஆசைக்கும், பிற ஆசைகளுக்கும் அதிகாரிகள் பணிந்து போகக் கூடாது என்றும், இதன் மூலம் யாருடைய நிர்ப்பந்தத்திற்கும் அடி பணியக் கூடாது என்றும் விதிமுறைகள் சொல்கின்றன.
- தாங்கள் அரசுப் பணியாளர் என்பதை எந்தச் சூழ்நிலையிலும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், முடிவுகளை எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தங்களுக்கும் சாதகமாக எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
- தங்களது பணிக்காலத்தின்போது அரசுத் தகவல்களை மிகவும் ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றும் இவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- நாட்டின்பாதுகாப்பு, இறையாண்மை, பொருளாதார நலன் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு அரசு சம்பந்தப்பட்ட தகவல்களை மிகவும் பாதுகாப்பாக பத்திரமாக பாதுகாக வேண்டும் என்றும், யாருக்கும் சாதகமாக இதில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications