கெய்ல் எரிவாயு விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ 25 லட்சம்
ஹைதராபாத்: கெய்ல் எரிவாயு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ 25 லட்சம் நிவாரணத் தொகை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நகரம் என்ற கிராமத்தில் எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்ததில் 15 பேர் பலியானார்கள்.

இதில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தொகையில், தலா ரூ.20 லட்சத்தை கெயில் நிறுவனம் வழங்கும்.
ஏற்கனவே இவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை தலா ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
விபத்தில் நிரந்தர ஊனம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications